தடுப்பூசி பெற்றுக்கொண்ட சுற்றுலாப்பயணிகளுக்கு பிரான்சிலிருந்து ஒரு செய்தி
பிரான்ஸ் அமெரிக்கர்கள் உட்பட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை வரவேற்கத் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், சுற்றுலாப்பயணிகள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கவேண்டும், தடுப்பூசி பெற்றுக்கொண்டதற்கான ஆதாரத்தையும் தங்களுடன் வைத்திருக்கவேண்டும்.
குறிப்பாக, அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளான பைசர், மொடெர்னா, ஆஸ்ட்ராசெனகா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனங்களின் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டிருக்கவேண்டும்.
பிரான்சிலுள்ள அமெரிக்க தூதரகங்கள், முழுமையாக தடுப்பூசி பெற்ற அமெரிக்கர்கள் மற்றும் 11 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் ஆகியோர் சுற்றுலாவுக்காக பிரான்ஸ் வரலாம் என்றும், அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியதில்லை என்றும் அறிவித்துள்ளன.
அதே நேரத்தில், இன்னமும் அமெரிக்கா பிரான்சின் ஆரஞ்சு பட்டியலிலேயே
இருப்பதால், பயணிகள் தாங்கள் பயணம் புறப்படுவதற்கு 72 மணி நேரம் முன்பு
செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை அல்லது 48 மணி நேரம் முன்பு செய்யப்பட்ட கொரோனா
ஆன்டிஜன் பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா இல்லை என்பதைக் காட்டுவதற்கான
ஆதாரத்தை சமர்ப்பிக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.