ஐரோப்பிய ஒன்றியத்தில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு ஆறுதலளிக்கும் ஒரு செய்தி: விவரம் செய்திக்குள்...
ஐரோப்பிய ஒன்றியத்தில் வாழும் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்கள், ஒரு ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு செல்வது இனி எளிதாகலாம் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய நாட்டவர்கள் அல்லாதவர்களைக் குறித்த விதிகள், அந்தந்த நாடுகளால்தான் பெரும்பாலும் முடிவு செய்யப்படுகின்றன.
பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்கள் ஒரு ஐரோப்பிய நாட்டில் வாழிட உரிமத்துக்கு விண்ணப்பித்தால், அவர்கள் அந்த நாட்டில் மட்டுமே வாழவும் பணி செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள்.
ஆனால், ஐரோப்பிய ஒன்றிய விதிகளின்படி, ஐரோப்பிய ஒன்றியத்தில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் ஒரு ஐரோப்பிய ஒன்றிய குடிமகன் அல்லாதவர், நீண்ட கால வாழிட உரிமம் பெறும் பட்சத்தில், அவர் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு பணிக்காக செல்ல உரிமை உள்ளது. ஆனால், அதற்கென சில நிபந்தனைகள் உள்ளன. அது எளிதான விடயமும் அல்ல.
ஆனால், இனி அது எளிதாக உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் அல்லாதவர்கள் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு பணிக்காக செல்வதை எளிதாக்கும் வகையில் அந்த விதிகளை தற்போது மீளாய்வு செய்ய உள்ளது.
ஏப்ரல் மாத இறுதியில் இந்த திட்டத்திற்கான முன்மொழிவு கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அத்திட்டத்திற்கு சம்ம்மதம் தெரிவிக்க வேண்டும் என்பதால், அந்த திட்டம் நடைமுறைக்கு வர பல மாதங்கள் முதல் வருடங்கள் வரை கூட ஆகலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை.