பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிஷி: ட்விட்டரில் போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள செய்தி...
பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவர் முறைப்படி பிரதமராக பதவியேற்றதைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமரான போரிஸ் ஜான்சன் ரிஷிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிஷிக்கு போரிஸ் ஜான்சன் வாழ்த்து தெரிவித்துக்கொண்டுள்ளார்.
போரிஸ் ஜான்சன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், ரிஷி சுனக்குக்கு வாழ்த்துக்கள், இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நாளில், இது, ஒவ்வொரு கன்சர்வேட்டிவ் கட்சியினரும் நமது புதிய பிரதமருக்கு முழுமனதாக ஆதரவு தெரிவிப்பதற்கான நேரமாகும் என்று கூறியுள்ளார்.
பிரித்தானிய பிரதமருக்கான போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட போரிஸ் ஜான்சன், கட்சியின் நலன் கருதி போட்டியில் பங்கேற்காமலே விலகிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Congratulations to @RishiSunak on this historic day, this is the moment for every Conservative to give our new PM their full and wholehearted support.
— Boris Johnson (@BorisJohnson) October 25, 2022