ஜேர்மனியில் வாடகை வீடுகளில் வசிப்போருக்கு கவலையை ஏற்படுத்தும் ஒரு செய்தி
ஜேர்மனியில், குறிப்பிட்ட சில வகை வாடகை வீடுகளில் வசிப்போர் இந்த ஆண்டு பெரிய அளவில் வாடகை உயர்வை சந்திக்க இருக்கிறார்கள்.
உக்ரைன் போர், எதிர்பாராத வகையிலெல்லாம் பல்வேறு நாடுகளில் பல வகையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
விலைவாசி உயர்வு, பணவீக்கம் என பல்வேறு பிரச்சினைகளை மக்கள் சந்திக்கத் தொடங்கிவிட்ட நிலையில், ஜேர்மனியில் Indexmiete clause என்னும் ஒருவகை திட்டத்தின் கீழ் வாடகைக்கு இருப்போருக்கான வீட்டு வாடகை இந்த ஆண்டு கணிசமாக அதிகரிக்கப்போகிறது.
இந்த Indexmiete clause என்பது என்னவென்றால், வீடு வாடகைக்குச் செல்லும்போது, வாடகைக்கான ஒப்பந்தத்தில் பணவீக்கம் அதிகரிப்பதைப் பொருத்து, வீட்டு வாடகையும் ஆண்டு தோறும் உயரும் என குறிப்பிடப்பட்டிருக்கும்.
வழக்கமாக வாடகை வீட்டில் வசிப்போருக்கு பயனளிக்கும் திட்டம் என கருதப்படும் இந்த Indexmiete clause வாடகைத் திட்டம், தற்போது பணவீக்கம் கன்னாபின்னாவென உயர்ந்து வருவதையொட்டி, பலனுக்கு பதிலாக பாரமாக மாறியுள்ளது.
ஆக, இந்த ஆண்டில் இந்த Indexmiete clause வாடகை வீடுகளில் வாழ்வோர், வாடகை உயர்வுகளை சந்திக்க இருக்கிறார்கள்.
ஆனாலும் ஒரு நல்ல விடயம் என்னெவென்றால், பணவீக்க விகிதம் குறையும்போது, வீட்டு வாடகையும் குறையக்கூடும் என்பதுதான்!