ஜூலை 5 முதல்... முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்ட கனேடியர்களுக்கு ஒரு செய்தி
ஜூலை மாதம் 5ஆம் திகதி முதல், முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்ட கனேடியர்கள், கொரோனா பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆவணத்தை சமர்ப்பித்தால், அவர்கள் கனடா திரும்பும்போது அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியதில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கனேடியர்களும் நிரந்தர வாழிட உரிமம் கொண்டவர்களும் கனடா புறப்படுவதற்கு 14 நாட்களுக்கு முன் முழுமையாக தடுப்பூசி பெற்றிருக்கவேண்டும்.
அவர்கள் கனடாவுக்கு திரும்பும்போது முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டிருப்பதுடன், பயணம் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இல்லை என நிரூபிக்கவேண்டும், அதற்குப் பின் கனடாவுக்குள் வந்ததும் மீண்டும் ஒரு கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.
அப்போது அவர்களுக்கு கொரோனா இருப்பது தெரியவந்தால், அவர்கள் தனிமைப்படுத்தல்
திட்டம் ஒன்றிற்கு உட்படவேண்டியிருக்கும்.
கொரோனா இல்லை என தெரியவந்தால் அவர்கள் தங்களை
தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியதில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.