பள்ளி மைதானத்தில் விழுந்து கிடந்த விண்கல்! பதற்றத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நாசா: மர்மத்தை உடைத்த முதல்வர்
அவுஸ்திரேலியாவில் உள்ள பள்ளி மைதானத்தில் விண்கல் விழுந்த கிடந்த வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
வட குயின்ஸ்லாந்தில் உள்ள Malanda மாநில பள்ளியின் விளையாட்டு மைதானத்திலே இச்சம்பவம் நடந்தது.
சமூக வலைதளங்களில் குறித்த வீடியோ மற்றும் புகைப்படம் வைரலானதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலர், விண்கல் குறித்து விசாரிக்க நாசாவிற்கு அழைப்பு விடுத்தனர்.
விண்கல் விவகாரம் வைரலானத்தை அடுத்து, இது பள்ளி ப்ராஜெக்ட் என்ற உண்மையை Malanda மாநில பள்ளியின் முதல்வர் Mark Allen உடைத்தார்.
இந்த பயிற்சியை வேடிக்கையானது என்று விவரித்த பள்ளிமுதல்வர் Mark Allen, படிப்பின் ஒரு பகுதியாக விண்கல் விழுந்தது குறித்து செய்தி வடிவில் சமர்பிக்குமாறு மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
அதை சிறப்பாக மற்றும் தத்துருபமாக செய்வதற்காக களத்தில் இருந்தவர்களிடம் தகவல் சேகரிப்பது, அவசர உதவி சேவை மற்றும் பொலிஸ் அதிகாரி இருப்பது போன்று உண்மையான செய்தி போன்று படம் பிடித்தனர். மாணவர்களுக்கு உதவுவதற்காக பொலிஸ் மற்றும் அவசர உதவி சேவை