இந்தியர் தலைமையிலான கனேடிய ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு: நீரிழிவுக்கான சிகிச்சையில் ஒரு மைல்கல்?
நீரிழிவு நோய்க்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் இன்சுலினை மாத்திரை வடிவில் கொடுப்பதில் கண்டுபிடிக்கப்பட்டது
இந்த சிகிச்சை முறை வெற்றி பெறுமானால், நீரிழிவு பிரச்சினை கொண்டவர்கள் ஒவ்வொரு வேளை சாப்பிடும் முன்பும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளவேண்டிய அவசியம் இருக்காது
இந்திய கனேடியர் ஒருவர் தலைமையிலான ஆய்வாளர்கள் குழு ஒன்று, நீரிழிவு நோய்க்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் இன்சுலினை மாத்திரை வடிவில் கொடுப்பதில் முக்கிய கண்டுபிடிப்பு ஒன்றைச் செய்துள்ளது.
Dr பிரதாப் சிங் (Dr Anubhav Pratap-Singh) இந்தியாவின் Kharagpurஇல் கல்வி பயின்றவர் ஆவார்.
இந்த சிகிச்சை முறை வெற்றி பெறுமானால், நீரிழிவு பிரச்சினை கொண்டவர்கள் ஒவ்வொரு வேளை சாப்பிடும் முன்பும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளவேண்டிய அவசியம் இருக்காது.
கடந்த 15 ஆண்டுகளாக இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளும் தன் தந்தையைப் பார்த்து, அவரைப் போன்றவர்களுக்காக எதையாவது செய்யவேண்டும் என்ற எண்ணம்தான் இந்த ஆய்வுக்கு வழிவகுத்தது என்கிறார் Dr பிரதாப் சிங்.
Source: UBC
தற்போது ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்டு வெற்றி பெற்றுள்ள இந்த சோதனை, இனி மனிதர்கள் மீது செய்யப்படவேண்டியுள்ளது.
உலகில் வேறு பல நாடுகளிலும் இதுபோன்ற சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றாலும், மாத்திரையாக கொடுக்கப்படும் இன்சுலின் எந்த அளவுக்கு உடலால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதில் Dr பிரதாப் சிங் தலைமையிலான குழு கவனம் செலுத்தி வருகிறது.
இந்த முயற்சி வெற்றி பெறுமானால் நீரிழிவு பிரச்சினையில் அது ஒரு மைல்கல்லாக கருதப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.