ஆறு கிரகங்கள் நேர் கோட்டில்! 1000 ஆண்டுகளுக்கு பிறகு வானில் நிகழும் ஒரு அதிசயம்.. பாதிப்பு உண்டா?
1,000 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏப்ரல் கடைசி வாரத்தில் தனித்துவமான வானியல் நிகழ்வு நடைபெறவுள்ளது.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சூரிய கிரகணம் நிகழ்ந்தது. அப்போது ஆறு கிரகங்கள் தனுசு ராசியில் சஞ்சரித்தன.
அதில் சூரியன், சனி, கேது, குரு, புதன், சந்திரன் ஆகிய கிரகங்கள் தனுசு ராசியில் இணைந்திருக்க கூடவே சூரிய கிரகணமும் நிகழ்ந்தது.
தற்போது ஏப்ரல் 2022 இன் கடைசி வாரத்தில், சூரிய உதயத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக, வீனஸ், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகியவை கிழக்கு வானில் வரிசையாக நிற்கும் போது ஒரு அரிய மற்றும் தனித்துவமான கிரக அணிவகுப்பு நடைபெறவுள்ளது. .
இது மூன்றாவது வகையான கிரக அணிவகுப்பாக இருக்கும். இந்த கிரகங்களின் கடைசி அணிவகுப்பு சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு கி.பி 947 இல் நடந்ததுள்ளது.
பாதிப்பு ஏற்படுமா?
- சாலை விபத்துக்கள், தீ விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைப் பார்க்கும் போது கிரகங்களின் சேர்க்கை பற்றிய அச்சம் எழுந்துள்ளது.
- சுபகிருது வருட தமிழ் பஞ்சாங்கத்தில் இந்த ஆண்டு மூத்த அரசியல்வாதிகளுக்கு கெண்டாதி கெண்டம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்த ஆண்டு புதிய விஷ காய்ச்சல் வேகமாக பரவும் என்றும் குழந்தைகள் மற்றும் நடுத்தர வயதுடையவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிக்கும் என்றும் பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அரசியல் தொடர்புடைய பழம்பெரும் புள்ளிகள் சிறை செல்வார்கள் என்றும் பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்வு - பொதுவாக சாதாரண மக்கள் நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நோய்கள் நீங்கும் என்று ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.
எந்த நேரத்தில் பார்க்கலாம்?
- ஏப்ரல் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் சூரிய உதயத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன், நான்கு கிரகங்களுடன் சந்திரனும் கிழக்கு அடிவானத்தில் இருந்து 30 டிகிரிக்குள் சரியான நேர்கோட்டில் தெரியும்.
- சூழ்நிலைகள் சரியாக இருந்தால், ஒருவர் வியாழன், வெள்ளி, சனி மற்றும் செவ்வாய் கிரங்களை தொலைநோக்கிகள் இல்லாமல் காணலாம்.
- ஏப்ரல் 30 ஆம் தேதி, பிரகாசமான கிரகங்கள் - வீனஸ் மற்றும் வியாழன் - மிக நெருக்கமாக பார்க்க முடியும். வீனஸ் வியாழனுக்கு 0.2 டிகிரி தெற்கே இருக்கும். ஏப்ரல் மாத இறுதி ஒரு அரிய வானியல் நிகழ்வோடு முடிவடையும்.