மகாராணியாரின் திருமண புகைப்படங்களில் நிகழ்ந்த தவறு... எப்படி சரி செய்தார்கள் தெரியுமா?
பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஒரு தவறு நிகழ்ந்துவிட்டது.
மலர்ச்செண்டை தவறவிட்ட மகாராணியார்
மகாராணியாரின் திருமணம் நிகழ்ந்தது 1947ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 20ஆம் திகதி.
ஆனாலும், இன்றும் அவரது திருமணம் குறித்து பேசப்படுகிறது. ஊடகங்களில் அவரது திருமண புகைப்படங்கள் வெளியாகின்றன.
ஆக, ஒரு மன்னர் அல்லது மகாராணி போன்றோரின் திருமண புகைப்படங்கள் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும் என்றில்லை.
இப்படியிருக்கும் நிலையில், மகாராணியாரின் திருமணப் புகைப்படங்கள், குறிப்பாக, முழுக் குடும்பமாக நின்று எடுக்கப்பட்ட புகைப்படங்களின்போது மகாராணியார் தனது மலர்ச்செண்டை தவறவிட்டுவிட்டார். குரூப் போட்டோக்கள் எனப்படும் அந்த குடும்பப் புகைப்படங்களை கவனித்தால், அவற்றில் மகாராணியார் கையில் மலர்ச்செண்டு இல்லாமல் நிற்பதைக் காணலாம்.
தேனிலவுக்கு நடுவில் மீண்டும் திருமண உடைக்கு மாறிய ராஜ தம்பதியர்
இப்படி ஒரு தவறு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதும், அதை சரி செய்ய முடிவு செய்யப்பட்டது.
ஆகவே, மகாராணியாரும் இளவரசர் பிலிப்பும் தேனிலவுக்குச் சென்றிருந்த நிலையில், தேனிலவின் நடுவில் மீண்டும் தம்பதியருக்கு திருமண உடைகள் அணிவிக்கப்பட்டு, இரண்டாவது முறை புகைப்படங்கள் எடுக்கப்பட்டனவாம்.
Image: Getty
இம்முறை, மகாராணியார் கையில் மலர்ச்செண்டு இருப்பதை அனைவருமே உறுதிசெய்துகொண்டார்களாம்.
அதுபோக, எதிர்காலத்தில் இப்படி ஒரு தவறு நிகழக்கூடாது என்பதற்காக, இனி ராஜ குடும்பத்தில் எந்த திருமணம் நிகழ்ந்தாலும், மணமகளுக்காக இரண்டு மலர்ச்செண்டுகள் தயாரித்து வைத்திருப்பது என அப்போதே முடிவு செய்யப்பட்டதாம்.
இந்த தகவல்களை, ராஜ குடும்பத் திருமணங்களுக்கு மலர் அலங்காரம் செய்பவரான David Longman என்பவர் வெளியிட்டுள்ளார்.
Image: Getty
Image: 2007 Getty Images