கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட மகனுடைய உடலைக் கண்டு கண்ணீர் விட்டுக் கதறும் தாய்: மனதை உலுக்கும் காட்சிகள்
கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய மாணவரின் உடலைக் கண்டு அவரது தாய் கண்ணீர் விட்டுக் கதறும் காட்சிகள் வெளியாகி, காண்போர் மனதை கலங்கச் செய்துள்ளன.
சென்ற வாரம், கனடாவின் ரொரன்றோவிலுள்ள சுரங்க ரயில் நிலையம் ஒன்றிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார் கார்த்திக் வாசுதேவ் (21) என்ற இந்திய மாணவர்.
அவரது உடல் அவரது சொந்த ஊரான Ghaziabadக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், பிள்ளை படித்து முடித்து தங்களை கவனித்துக் கொள்வான் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த கார்த்திக்குன் தாய், மகனை சடலமாகக் காண இயலாமல் கண்ணீர் விட்டுக் கதறும் காட்சி, கல் மனதையும் கரைத்துவிடும்போல் அமைந்துள்ளது.
Seneca பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த கார்த்திக், உணவகம் ஒன்றில் பணியாற்றிவந்துள்ளார். அவர் அந்த உணவகத்துக்குச் செல்லும்போதுதான் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
கார்த்திக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ரொரன்றோ பொலிசார் Richard Jonathan Edwin (39) என்ற நபரைக் கைது செய்துள்ளார்கள்.
Richard என்னும் அந்த நபர் ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன் வேறொருவரைத் துப்பாக்கியால் சுட்ட நிலையில், அவர் எதற்காக கார்த்திக்கை சுட்டார் என்பது தெரியவில்லை.
என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்வதற்காகவும், தன் மகனுடைய மரணத்துக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும், கார்த்திக்கின் தந்தையான ஜித்தேஷ் வாசுதேவ் கனடா செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.