கொரோனா பாதிப்புடன் பயணம்: பாராளுமன்ற பெண் உறுப்பினர் கைது
கொரோனா பாதிப்புடன் பாராளுமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொண்டதாக கூறி ஸ்கொட்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் மார்கரெட் ஃபெரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 26 முதல் 29 வரை கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறியதாகவும் பொறுப்பற்ற நடத்தை தொடர்பாகவும் 60 வயதான மார்கரெட் ஃபெரியர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புடன் அவர் சுமார் 800 மைல்கள் தொலைவு அளவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் அவர் உரை நிகழ்த்திய அந்த செப்டம்பர் மாதம் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது அவருக்கு தெரிந்திருந்ததாகவும், அதன் பின்னர் அவர் கிளாஸ்கோவில் அமைந்துள்ள தமது குடியிருப்புக்கு திரும்பியுள்ளார்.
மட்டுமின்றி, அவரது சோதனை முடிவு நிலுவையில் உள்ள நிலையில் அவர் லானர்க்ஷையரில் ஒரு அழகு நிலையம், பரிசுக் கடை மற்றும் உடற்பயிற்சி கூடத்திற்கும் சென்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஸ்கொட்லாந்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையின் முடிவில் பாராளுமன்ற உறுப்பினர் மார்கரெட் ஃபெரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.