மாணவர்கள் கண்டிப்பாக செய்ய வேண்டிய ஆசனம்!
மாணவர்கள் முக்கியமாக செய்ய வேண்டிய ஆசனம் வஜிராசனம்.
இந்த ஆசனம் இரத்த ஓட்டத்தை நன்றாக இயங்க செய்கிறது. இரத்த ஓட்டத்தை மூளைக்கு பாய செய்கிறது.
மாணவர்கள் மற்றும் தொழில் செய்யக்கூடியவர்கள்,தொழிலதிபர்கள் அனைவரும் செய்ய கூடிய ஆசனம் இதுவாகும் .
இது மூளைக்கு இரத்த ஓட்டத்தை பாய செய்வதன் மூலமாக நன்றாக சிந்திக்கும் திறனை வழங்குகிறது.
அலுவலத்தில் வேலை செய்பவர்கள் கூட இதனை செய்யலாம் . ஒரே இடத்தில அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு வயிற்று தசை இறுக்கமாக காணப்படும்.
இதனை இதை வஜிராசனம் சரி செய்து விடும்.
காலையில் ,காலை கடன்களை முடித்து விட்டு 2 நிமிடம் வஜிராசனத்தில் அமர்ந்து தியானம் செய்தால் ஜீரண பிரச்சினைகள் சரியாகும்.
வஜிராசனம் மற்றும் சசாங்காசனம் எவ்வாறு செய்யலாம்?
முதலில் நிமிர்ந்து அமர்ந்து கொள்ள வேண்டும்.
இது சுகாசன நிலை .
மெதுவாக கண்களை மூடி 2 நிமிடம் மூச்சில் கவனம் செலுத்த வேண்டும்.
கண்களை திறந்து 2 கால்களையும் நீட்டிக்கொள்ளுங்கள்.
2 கால்களையும் மடித்து 2 முட்டைகளையும் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள்.
கைகளை முட்டி மேல் வைத்து நிமிர்ந்து அமர்ந்து கொள்ளுங்கள்.
கண்களை மூடுங்கள்.
மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வெளிவிடுங்கள் கண்களை மூடி 1 நிமிடம் முதல் 5 நிமிடம் வரை இருக்கலாம்.
அடுத்தது சசாங்காசனம் மூச்சை மெதுவாக வெளிவிட்டு கைகளை பக்கவாட்டில் வைத்து உடலை மடித்து 10 வினாடிகள் இருந்து பின் மூச்சை உள்ளிழுத்து பொறுமையாக மேலே எழும்பி வேண்டும்.
பின் கால்களை நீட்டி மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வெளிவிடுங்கள்.
சுகாசன நிலையில் இருந்துக்கொள்ளுங்கள்.
பின் இரு கால்களையும் நீட்டி மெதுவாக மூச்சினை உள்ளிழுத்து வெளிவிடுங்கள் மீண்டும் 2 கால்களையும் மடித்து கொள்ளுங்கள் 3 முறை மூச்சினை உள்ளிழுத்து வெளிவிடுங்கள் 30 செக்கன் வரை இருக்கலாம் தொடர்ந்து செய்யும்பொது 1 நிமிடம் வரை செய்யலாம்.
வஜிராசனத்திம் செய்வதனால் ஏற்படும் நன்மைகள்
உடலை திடமாக பேணல்.
தன்னம்பிக்கை மற்றும் மனதை ஒருநிலைப்படுத்தல்.
ஜீரன மணடலம் நன்றாக இயங்க உதவும்.
உயர் இரத்த அழுத்தத்தினை சரி செய்கிறது.
இதயம் நன்றாக இயங்கும் மூளை சிறப்பாக செயல்படும்.
மூட்டுக்களுக்கு இடுப்புகளுக்கு பலன் கொடுக்கும்
சுவாசத்தை இயங்க செய்யும்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.