பிரான்சில் மாயமான குழந்தை: நீடிக்கும் மர்மம்
பிரான்சில் மாயமான இரண்டு வயது சிறுவன் ஒருவனின் உடல் பாகங்கள் ஒன்பது மாதங்களுக்குப் பின் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், வெளியாகியுள்ள புதிய தகவல்கள் குழப்பத்தை அதிகரிக்கவே செய்துள்ளன.
மாயமான சிறுவன்
பிரான்சிலுள்ள Le Vernet என்னும் கிராமத்தைச் சேர்ந்த Emile Soleil என்னும் இரண்டு வயதுச் சிறுவன், 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் காணாமல் போனான்.
Credit: Enterprise
சனிக்கிழமையன்று, மலையேற்றத்துக்குச் சென்ற ஒருவர், உயிரற்ற குழந்தை ஒன்றின் உடல் பாகங்களைக் கண்டு பொலிசாருக்கு தகவலளித்த நிலையில், அது Emileஉடைய உடல் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
Credit: Splash
நீடிக்கும் மர்மம்
இந்நிலையில், சிறுவன் Emileஉடைய உடைகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவனது உடல் பாகங்கள் கிடைத்த இடத்தில் இல்லாமல், அவை சுமார் 500 அடி தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மேலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
Credit: AFP
அத்துடன், உடற்கூறு ஆய்விலும் எந்த விடயத்தையும் உறுதி செய்ய இயலவில்லை. Emile வழக்கு தொடர்பில் ஊடகவியலாளர்களை சந்தித்த விசாரணை அதிகாரியான Jean-Luc Blachon, குழந்தையின் மண்டை ஓடு சில இடங்களில் உடைந்துள்ளதாகவும், அதில் பல் தடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் குழந்தையின் ஒரு பல்லையும் காணவில்லை.
அதாவது, காட்டு மிருகங்கள் ஏதேனும் குழந்தையுடைய மண்டை ஓட்டைக் கொண்டு போட்டிருக்கலாம் என அவர் கருதுகிறார்.
Credit: AFP
அத்துடன், குழந்தை கீழே விழுந்ததில் அவனது மண்டை ஓட்டில் அடிபட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அதே நேரத்தில், இது கொலையாக இருக்கலாம் என்னும் கோணத்திலும் விசாரணை தொடர்கிறது.
Credit: AFP
ஆக மொத்தத்தில், மாயமான குழந்தையின் உடல் பாகங்கள் கிடைத்தும் அவன் எப்படி இறந்தான் என்பது தொடர்பில் மர்மமே நீடிக்கிறது.
Credit: Rex
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |