பூமியை சுற்ற போகும் மற்றொரு நிலவு கண்டுபிடிப்பு! எப்போதிலிருந்து தெரியுமா?
பூமியை சுற்ற போகும் தற்காலிகமான மற்றொரு நிலவு ஒன்றை கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
புதிய நிலவு கண்டுபிடிப்பு
இந்த வருடத்தில் பூமியை சுற்றும் தற்காலிகமான நிலவு ஒன்று கிடைக்கப்போகிறது என்கிற தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ம் திகதி அன்று 10 மீட்டர் கொண்ட சிறுகோள் கண்டிபிடிக்கப்பட்டு Asteroid 2024 PT5 என்று பெயரிடப்பட்டது.
இந்த சிறுகோளானது, வரும் செப்டம்பர் மாதம் 29 முதல் நவம்பர் 25 -ம் திகதி வரை பூமிக்கு சிறு நிலவாக (mini moon) செயல்படவுள்ளது.
இந்த காலகட்டத்தில் மட்டும் பூமியின் புவிஈர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு சிறு நிலவாக செயல்பட்டு பூமியை சுற்றும். ஆனால், இந்த சிறு நிலவானது ஒரு முறை பூமியை சுற்றும் முன்னரே புவிஈர்ப்பு விசையில் இருந்து விடுபடும்.
பின்னர், அது சூரியனை சுற்ற தொடங்கும். அதாவது நவம்பர் 25 -ம் திகதிக்கு பின்னர் சூரியனை சுற்றும்.
இது சிறியது என்பதால் பூமியை சுற்றிவரும் காலத்தில் இதனை வெறும் கண்களால் பார்ப்பது மிகவும் அரிதானது.
ஆனால், பூமிக்கு அருகில் இருக்கும் பொருட்களுக்குள் ஏற்படும் உறவை ஆய்வு செய்யவும், புவியீர்ப்பு அழுத்தங்கள் மற்றும் விசையினால் பூமிக்கு வெளியில் உள்ளவை எப்படி செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்ளவும் இது உதவியாக இருக்கும் என்று அமெரிக்கன் ஆஸ்ட்ரோனாமிகள் சொசைட்டி விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
Newly-discovered #asteroid 2024 PT5 is about to undergo a "mini-moon event" when its geocentric energy becomes negative from September 29 - November 25.https://t.co/sAo1qSRu3J pic.twitter.com/pVYAmSbkCF
— Tony Dunn (@tony873004) September 10, 2024
இதற்கு முன்பு, கடந்த 2022 -ம் ஆண்டில் NX1 என்ற சிறு நிலவு பூமியை சுற்றியது குறிப்பிடத்தக்கது ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |