இருக்கிற பிரச்சினை போதாதென்று... ஜேர்மனியில் நதி ஒன்றினால் உருவாகியுள்ள புதிய பிரச்சினை
*எரிபொருள் பிரச்சினையால் ஜேர்மனி ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது.
*தற்போது நதி ஒன்று வற்றி வருவதால், கூடுதல் பிரச்சினைகள் உருவாகி வருகின்றன.
ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடு ஜேர்மனி. ஆனால், இப்போது அது பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.
ஏற்கனவே ரஷ்யா தனது எரிவாயு வழங்கலைக் குறைத்துக்கொண்டதால் நாட்டில் எரிபொருள் பிரச்சினை பல சிக்கல்களுக்கும் அச்சங்களுக்கும் வழி வகுத்துள்ளது.
image - worldatlas
அந்த பிரச்சினை போதாதென்று இப்போது புதிய பிரச்சினை ஒன்று உருவாகியுள்ளது ஜேர்மனியில்.
அந்த பிரச்சினைக்குக் காரணம் ஜேர்மனியில் ஓடும் ஒரு நதி!
ஆம், ஜேர்மனியில் ஓடும் Rhine நதியில் தண்ணீர் மட்டம் குறைந்துகொண்டே வருகிறது. சில இடங்களில் வெகு குறைவான தண்ணீரே உள்ளது. இந்த நதி சரக்குப் போக்குவரத்துக்கு மிக முக்கியமான ஒன்று என்பதால், தண்ணீர் குறைந்த நதியில் பயணிப்பதற்காக கப்பல்கள் குறைந்த சரக்குடன் பயணிக்கத் துவங்கியுள்ளன.
இதனால், போக்குவரத்துச் செலவு அதிகரித்துள்ளது, பொருளாதார மற்றும் சரக்கு விநியோக பாதிப்பு அபாயம் அதிகரித்துள்ளது.
தொடர்ந்து நதியில் தண்ணீர் மட்டம் குறையுமானால், அதனால் குறைந்த சரக்குகளையே கப்பல்களால் கொண்டு செல்ல இயலும், அதனால் வர்த்தகர்களுக்கு நஷ்டம் ஏற்படும். ஆகவே, பொருளாதாரம் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
ஏற்கனவே ரஷ்ய எரிபொருள் வழங்கல் விவகாரம் ஜேர்மனிக்கு பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இந்த நதியும் தன் பங்குக்கு பிரச்சினையை அதிகரித்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.