இளவரசர் வில்லியம் வகித்த பதவியை இளவரசி கேட்டுக்கு வழங்கியுள்ள மன்னர் சார்லஸ்
மகாராணியாரின் மறைவைத் தொடர்ந்து ராஜ குடும்பத்தில் பல மாற்றங்களைச் செய்துவருகிறார் மன்னர் சார்லஸ். பல பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. பலருக்கு புதிய பொறுப்புக்கள் அளிக்கப்படுகின்றன.
குறிப்பாக, அரியணையேறும் வரிசையில் அடுத்ததாக இருக்கும் இளவரசர் வில்லியம், கேட் தம்பதியருக்கு பல புதிய பொறுப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ராணியாக தயாராக்கப்படும் இளவரசி கேட்
இளவரசர் வில்லியம் மன்னரானால், அவரது மனைவி கேட் ராணியாவார். அதற்கு அவரைத் தயார் செய்யும் விதத்திலோ என்னவோ, இளவரசி கேட்டுக்கு முக்கிய பொறுப்புக்களை வழங்கி வருகிறார் மன்னர்.
சமீபத்தில், வில்லியம் வேல்ஸ் இளவரசரானதால், அவரது மனைவி கேட், வேல்ஸ் இளவரசியானார். அந்த பொறுப்பு மிக முக்கியமானதாகும். காரணம் வேல்ஸ் இளவரசர் என்ற பொறுப்பை முன்பு வகித்தவர் தற்போது மன்னராகியுள்ள சார்லஸ்.
Image: PA Wire/PA Images
இளவரசிக்கு மற்றொரு பதவி
இந்நிலையில், இளவரசி கேட்டுக்கு மீண்டும் ஒரு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. Colonel of the Irish Guards என்றபொறுப்பை மன்னர் சார்லஸ் இளவரசி கேட்டுக்கு வழங்கியுள்ளார்.
இதற்கு முன் இந்தப் பொறுப்பை வகித்தவர் இளவரசி கேட்டின் கணவரான இளவரசர் வில்லியம் என்பது குறிப்பிடத்தக்கது.