சுவிட்சர்லாந்தில் மாயமான இரட்டைக் குழந்தைகளை வைத்து வைரலாகும் ஒரு செய்தி...
பிரித்தானியச் சிறுமி மேட்லின் மெக்கேன் காணாமல்போனதை வியாபாரமாக்கும் முயற்சிகள் துவங்கியுள்ளன.
மேட்லின் பெயரில் டி ஷர்ட்கள் விற்பனை
போர்ச்சுகல்லில் மாயமான பிரித்தானிய சிறுமி மேட்லின் மெக்கேனை வைத்து பணம் பார்க்கும் முயற்சியிலும் சிலர் இறங்கியுள்ளார்கள்.
மேட்லின் பெயரின் டி ஷர்ட், கோப்பைகள் முதலானவை விற்பனைக்கு வரத்துவங்கியுள்ளன.
சில இளம்பெண்கள், தான்தான் காணாமல்போன மேட்லின் என்று கூறி பப்ளிசிட்டி தேடத்துவங்கியுள்ளனர்.
Credit: iammadeleinemcann/Instagram
சுவிட்சர்லாந்தில் மாயமான இரட்டைக் குழந்தைகளை வைத்து ஒரு செய்தி
இந்நிலையில், தற்போது தான் தான் காணாமல் போன மேட்லின் என்று கூறிக்கொள்ளும் போலந்து நாட்டு இளம்பெண்ணான ஜூலியாவையே (Julia Wendell, 21) அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் ஒரு செய்தி உலாவருகிறது.
அதாவது, ஜூலியா, சுவிட்சர்லாந்தில் சிறுவயதில் காணாமல் போன Livia Schepp என்னும் சிறுமியாக இருக்கலாம் என்று கூறும் செய்திகள் இணையத்தில் உலாவரத் துவங்கியுள்ளன.
2011ஆம் ஆண்டு, இரட்டைக் குழந்தைகளான Alessia மற்றும் லிவியா (Livia Schepp) என்னும் ஆறு வயதுக் குழந்தைகள் இருவரையும், மேற்கு சுவிட்சர்லாந்திலுள்ள அவர்கள் வீட்டிலிருந்து அவர்களுடைய தந்தையான மத்தியாஸ் (Matthias Schepp, 43) தூக்கிச் சென்றார்.
சில நாட்களுக்குப் பிறகு பிள்ளைகளை திரும்பக் கொண்டு விடுவதாக பிள்ளைகளின் தாயான Irina Lucidiயிடம் கூறிச் சென்ற மத்தியாஸ், திரும்ப வரவேயில்லை, பிள்ளைகளும்...
Credit: Twitter
அப்போதுதான் மத்தியாஸ் தன் மனைவியைப் பிரிந்திருந்தார். பிரிவால் அவர் வாடியிருந்தார்.
சிறிது நாட்களுக்குப் பிறகு, மத்தியாஸின் உயிரற்ற உடல் தெற்கு இத்தாலியில் கிடைத்தது. அவர் ஓடும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டிருந்தார். தன் மகள்களைக் கொன்றுவிட்டதாக மத்தியாஸ் தன் மனைவிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், குழந்தைகளின் உடல்கள் கிடைக்கவேயில்லை.
தற்போது, அந்தக் குழந்தைகளில் ஒருத்தியான லிவியா மற்றும் போலந்து பெண்ணான ஜூலியா ஆகியோரின் புகைப்படங்கள் அருகருகே பிரசுரிக்கப்பட்டு, ஜூலியாதான் காணாமல் போன லிவியாவாக இருக்கக்கூடும் என ஒரு செய்தி உலாவரத் துவங்கியுள்ளது.
Credit: Twitter