பிரபல நாட்டில் சிறுமியை சீரழித்ததற்காக ஆயுள் தண்டனை பெற்ற முதல் குற்றவாளிக்கு சிறைக்குள் நேர்ந்த கதி! வெளியான புகைப்படம்
அவுஸ்திரேலியாவில் சிறுமியை கழிப்பறையில் வைத்து சீரழித்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்ற கைதி சிறையிலேயே உயிரிழந்துள்ளான்.
ஆண்டணி சம்பீரி (57) என்பவர் சிறுமியை சீரழித்த குற்றத்திற்காக அவுஸ்திரேலியாவில் ஆயுள் தண்டனை பெற்ற முதல் குற்றவாளி ஆவார்.
இவர் 60 வயதான பெண்ணை கடந்த 2012ல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்து வெளியில் வந்த ஆண்டனி கடந்த 2018ல் சிட்னியில் உள்ள பள்ளியின் கழிப்பறையில் கத்தி முனையில் 7 வயது சிறுமியை சீரழித்திருக்கிறான்.
மேலும் சத்தம் போட்டால் கழுத்தை அறுத்துவிடுவேன் என கூறி சிறுமி வாய்க்குள் டிஷ்யூ பேப்பரை வைத்து துஷ்பிரயோகம் செய்தான்.
இது தொடர்பான வழக்கில் கைதான ஆண்டனிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்த அவனுக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் கொடூர குற்றவாளியான ஆண்டனி நேற்று சிறையிலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த தகவல் உறுதி செய்யப்பட்ட போதிலும் அவர் இப்படி உயிரிழந்தார் என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.