கனேடிய நகரமொன்றில் நான்கு வயது குழந்தை மீது மோதிய பயணிகள் ரயில்: அதிர்ச்சியை உருவாக்கியுள்ள ஒரு செய்தி
கனேடிய நகரமொன்றில் ரயில் மோதி நான்கு வயது குழந்தை ஒன்று பலியான சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள Mississauga நகரில், நேற்றிரவு 7.39 மணியளவில் நான்கு வயது குழந்தை ஒன்றின் மீது பயணிகள் ரயில் ஒன்று மோதியுள்ளது.
இந்த பயங்கர சம்பவத்தில் அந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டது. உடனடியாக அந்த ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.
குழந்தையின் குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க, அந்த குழந்தையின் பெயர், புகைப்படம் முதலான விவரங்கள் வெளியிடப்படவில்லை.
Mississauga நகர மேயரான Bonnie Crombie, இந்த துயர செய்தி கேட்டு தான் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன், அந்தக் குழந்தையை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
COLLISION:
— Peel Regional Police (@PeelPolice) July 27, 2022
- Lolita Gdns/Silver Creek Blvd #Mississauga
- Child has been struck by a train
- Child has been pronounced deceased on scene
-Investigation continuing
-Few details at this time
- C/R at 7:39 p.m.
- PR22-0248848