ஓட்டு போட வந்த பெண்ணை கத்தியால் குத்திய நபர்.., விக்கிரவாண்டியில் பரபரப்பு
வாக்களிப்பதற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்த பெண்ணை நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாக்குசாவடியில் பரபரப்பு
விக்கிரவாண்டி அருகே அன்னியூரை அடுத்த கொசப்பாளையத்தை சேர்ந்தவர் கனிமொழி (42). இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், ஏழுமலை என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கனிமொழிக்கு மற்றொரு நபருடன் தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த ஏழுமலை, கனிமொழியை கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், கனிமொழி அதனை பொருட்படுத்தாமல் இருந்துள்ளார்.
இன்று விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி கொசபாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று 11.30ம ணியளவில் வாக்களிக்க கனிமொழி வரிசையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது ஆத்திரத்தில் அங்கு வந்த ஏழுமலை, மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து கனிமொழியை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதனால் ரத்த வெள்ளத்தில் இருந்த கனிமொழியை அருகில் இருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |