ஜேர்மனிக்கு வந்து இரண்டே மாதங்களுக்குள் பெண்களைக் குறிவைத்து கொலை செய்த நபர்: பொலிசார் வெளியிட்டுள்ள தகவல்
ஜேர்மனியில் வயதான பெண்களைக் குறிவைத்து கொலை செய்வதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பொலிசார் வெளியிட்டுள்ள விவரம்
தென்மேற்கு ஜேர்மனியிலுள்ள Schwäbisch Hall என்ற இடத்தில் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டது தொடர்பாக செர்பியா நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அந்த 31 வயது நபர், 2022ஆம் ஆண்டு, அதாவது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்தான் தன் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் ஜேர்மனிக்கு குடிபெயர்ந்துள்ளார்.
அவர் அந்தப் பெண்கள் கொலை தொடர்பாக செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், அவர் மேலும் சில குற்றச்செயல்களிலும் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களில் காணப்பட்ட டிஎன்ஏ அடையாளம் காட்டியதின்பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை தொடர்கிறது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.