டைம் ட்ராவல் உண்மைதானா? வியப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு புகைப்படம்
டைம் ட்ராவல் குறித்த செய்திகள் அவ்வப்போது ஊடகங்களில் வெளியாகி, சில நேரம் ஆச்சரியத்தையும், சில நேரம் சந்தேகத்தையும் ஏற்படுத்துவதுண்டு.
தற்போது, டைம் ட்ராவல் உண்மைதானோ என எண்ணவைக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வியப்பை உருவாக்கியுள்ளது.
1940களில் பிரித்தானியாவில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம், டைம் ட்ராவல் என்பது உண்மைதானோ என பலரையும் எண்ணவைத்துள்ளது.
1943ஆம் ஆண்டு, இங்கிலாந்திலுள்ள Cornwall என்னும் இடத்தில் அமைந்துள்ள கடற்கரை ஒன்றில், பிரித்தானியர்கள் ரிலாக்ஸ் செய்வதைக் காட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த புகைப்படத்தில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், கடற்கரையில், கூட்டத்தின் நடுவே, கோட் சூட் அணிந்த ஒருவர் மொபைல் போனை பார்த்துக்கொண்டிருப்பது போல் தோன்றுவதுதான்.
அந்தப் புகைப்படத்தைக் கண்ட பலர், அப்படியானால் டைம் ட்ராவல் என்பது உண்மைதான் போலும், பாருங்கள், எதிர்காலத்தைச் சேர்ந்த ஒருவர் மொபைல் போன் இல்லாத காலத்துக்குச் சென்று மொபைல் போனை பார்த்துக்கொண்டிருக்கிறார் என்கிறார்.
Credit: South London History/Twitter
ஆனால், வேறு சிலரோ, அது மொபைல் இல்லை, அவர் சிகரெட்டைத்தான் சிகரெட் பெட்டியின் மீது உருட்டிக் கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளனர்.
டைம் ட்ராவல் உண்மை என்பதை அந்த புகைப்படம் நிரூப்பிக்கிறதோ இல்லையோ, 1940களில் பிரித்தானியா எப்படி இருந்தது, பிரித்தானியார்களின் உடை போன்ற விடயங்கள் எப்படி இருந்தன என்பதை அந்த படம் காட்டுவதை மறுப்பதற்கில்லை.
Credit: South London History/Twitter