இளவரசர் வில்லியமை காதலிக்கும்போதே தன்னுடைய அறையில் வேறொரு ஆணின் படம் இருந்ததை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட கேட்
இளவரசர் வில்லியமை காதலிக்கும்போது இளவரசி கேட் அறையில் வேறொரு ஆணின் படம் இருந்ததை அவரே வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அது ஒரு மொடலின் படம்.
இளவரசர் வில்லியமை காதலிக்கும்போது இளவரசி கேட் அறையில் வேறொரு ஆணின் படம் இருந்ததை அவரே வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார், அதுவும் இளவரசர் வில்லியம் முன்னிலையிலேயே...
இளவரசி கேட் கல்லூரியில் படிக்கும்போது, தனது விடுதி அறையின் சுவர்களில் இளவரசர் வில்லியமுடைய புகைப்படங்களை ஒட்டி வைத்திருந்ததாக, அதே அறையில் கேட்டுடன் தங்கியிருந்த Jessica Hay என்னும் மாணவி ஒருமுறை கூறியிருந்தார்.
Image: Tim Rooke/REX/Shutterstock
2010ஆம் ஆண்டு வில்லியமுக்கும் கேட்டுக்குக்கும் நிச்சயதார்த்தம் ஆனபோது, அந்த விடயம் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேட்டிடம் கேள்வி எழுப்பினார்.
அப்போது, கேட்டை முந்திக்கொண்டு பதிலளித்த வில்லியம், இல்லை, இல்லை, அவரது விடுதி அறையின் சுவரில் ஒரு படம் இல்லை, என்னுடைய 20 படங்களை ஒட்டிவைத்திருந்தார் என்றார் கிண்டலாக.
ஆனால், அதை மறுத்த கேட், தனது அறையில் வில்லியமுடைய படம் இல்லை என்றும், சிறுவயதிலிருந்தே தனக்குப் பிடித்த Levi ஜீன்ஸ் மொடல் ஒருவரின் படத்தைத்தான் தனது அறையில் ஒட்டி வைத்திருந்ததாகவும் கூறி, சாரி வில்லியம், என்று கூற, ஏமாற்றத்தை மறைத்துக்கொண்ட வில்லியம் சமாளித்துக்கொண்டு, அதுவும் Levi ஜீன்ஸ் அணிந்த என்னுடைய படமாகத்தான் இருந்திருக்கும் என தன்னைத்தானே ஆறுதல் படுத்திக்கொண்டார்!
Image: Getty Images