60,000 இலவச இரயில் டிக்கெட்கள்... பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி வெளியிடவிருக்கும் ஒரு திட்டம்
பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கிடையில் இந்த ஆண்டு கோடையில் பயணிக்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாக உள்ளது.
60,000 இலவச இரயில் டிக்கெட்கள்
ஆம், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள், வரும் கோடையில் 60,000 இலவச இரயில் டிக்கெட்களை வழங்க இருக்கின்றன.
பயணத்தை ஊக்குவிப்பதற்காகவும், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனிக்கிடையில் ஒரு கலாச்சாரப் பரிமாற்றத்தை உருவாக்குவதற்காகவும் இந்த திட்டம் வெளியாக உள்ளது.
இத்திட்டத்தை பிரான்ஸ் போக்குவரத்துத்துறை அமைச்சரான Clément Beauneம், ஜேர்மன் போக்குவரத்துத்துறை அமைச்சரான Volker Wissingம் அறிவித்துள்ளார்கள்.
அவர்கள் இருவரும் இணைந்து வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், Elysée ஒப்பந்தத்தின் 60ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு 60,000 இலவச இரயில் டிக்கெட்கள் வழங்கப்பட இருக்கின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தால் யாருக்கு பயன்?
இத்திட்டம், பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் நாட்டு இளைஞர்கள், அதுவும், 27 வயதுக்கு குறைந்த இளைஞர்களுக்கு மட்டுமே.
பாதி டிக்கெட்கள், அதாவது, 30,000 டிக்கெட்கள் பிரான்ஸ் நாட்டு இளைஞர்களுக்கும், 30,000 டிக்கெட்கள் ஜேர்மனி நாட்டு இளைஞர்களுக்கும் வழங்கப்பட உள்ளன. இரு நாட்டவர்களும் தங்கள் நாட்டிலிருந்து அடுத்த நாட்டுக்கு, அதாவது, பிரான்ஸ் நாட்டவர்கள் ஜேர்மனிக்கும், ஜேர்மன் நாட்டவர்கள் பிரான்சுக்கும் பயணிக்கப்போகிறார்கள்.
இப்போதைக்கு இத்திட்டம் தொடர்பில் இவ்வளவு தகவல்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன.
? Diesen Sommer werden wir 60 000 kostenlose Jugendtickets zur Verfügung stellen, damit junge Menschen unter 27 Jahren mit dem Zug durch Deutschland und Frankreich fahren können! ?? ?? ??
— Volker Wissing (@Wissing) January 22, 2023