சுவிட்சர்லாந்து இதற்குமுன் எப்போதும் இல்லாத வகையில் எதிர்கொள்ள இருக்கும் ஒரு பிரச்சினை: பின்னணியில் உக்ரைன் போர்
உக்ரைன் போரால் உருவாகியுள்ள விலைவாசி உயர்வு உலகம் முழுவதையும் கடுமையாக பாதித்துள்ளது.
அதற்கு சுவிட்சர்லாந்தும் விதிவிலக்கல்ல!
சுவிஸ் பெடரல் ஆற்றல் அலுவலகத்தின் தலைவரான Benoît Revaz, ஐரோப்பாவை மையமாகக்கொண்டு உலகம் முழுவதும் முதல் ஆற்றல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என்கிறார்.
ஐரோப்பாவில் ஆற்றல் வழங்கலைப் பொருத்தவரை முன் எப்போதும் இல்லாத அளவில் ஒரு நிலையற்றதன்மை நிலவுகிறது என்கிறார்.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, இந்த மின் நெருக்கடியை எதிர்கொள்ள, மின்சார பயன்பட்டைக் குறைப்பதுதான் முக்கியமான வழியாகும். பொதுமக்கள் மின்சார பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் விழுப்புணர்வை ஏற்படுத்துவது Revazஇன் திட்டங்களில் முக்கியமான ஒன்று.
இதுபோக, சுவிட்சர்லாந்து, எரிவாயு தொடர்பில் ஜேர்மனியுடன் ஒப்பந்தம் ஒன்று தொடர்பாக பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதுடன், இத்தாலியுடன் பேச்சுவார்த்தை துவங்கவும் திட்டமிட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
Photo by Pok Rie on Pexels.com