தடைகளை தகர்த்தெறிந்து உள்ளே சென்ற போராட்டக்காரர்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பொதுமக்கள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என தெரிவித்து பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன்று பெருந்திரளான மக்கள் ஒன்று சேர்ந்து அதிபர் மாளிகைக்குள் மற்றும் வீட்டிற்கு நுழைய முற்ப்பட்டனர்.
இந்நிலையில் அதிபர் மாளிகைக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிய நிலையிலும், போராட்டக்காரர்கள் மாளிகைக்குள் பல தடைகளை தாண்டி நுழைந்துள்ளனர்.
தற்போது ஜனாதிபதி செயலகத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்துள்ள காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பு அனைத்தையும் தகர்த்தெறிந்து உள்ளே போகும் காட்சி பொதுமக்களை இன்னும் உற்சாகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.