கனடா வெளியிட்ட 11 பேர் கொண்ட வன்முறை கும்பல் பட்டியலில் 9 இந்திய வம்சாவளியினர்! முக்கிய தகவல்
கனடாவில் வன்முறை கும்பலை சேர்ந்த 11 பேரை அடையாளம் கண்டறிந்து அந்நாட்டு பொலிசார் பொது எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அதில் 9 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
அதன்படி இந்த 9 பேரும் மிகவும் வன்முறை கும்பல் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒருங்கிணைந்த படைகளின் சிறப்பு அமலாக்கப் பிரிவு (CFSEU-BC) வான்கூவர் காவல்துறை மற்றும் BC ராயல் கனடியன் மவுண்டட் காவல்துறையுடன் இணைந்து பொது எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதில், கும்பல் மோதல்கள் மற்றும் தீவிர அளவிலான வன்முறைகளுடன் தொடர்புகொள்வதன் காரணமாக பொது பாதுகாப்புக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக 11 பேர் பட்டியல் வெளியிடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
A public safety warning has been issuing in partnership with @VancouverPD @BCRCMP identifying 11 individuals who pose a significant threat to public safety due to their ongoing involvement in gang conflicts and connection to extreme levels of violence #endganglife pic.twitter.com/Nt57E3SVmz
— CFSEU-BC (@cfseubc) August 3, 2022
அந்த பட்டியலில் உள்ள பெயர்கள் பின் வருமாறு: Shakiel Basra (28), Amarpreet Samra (28), Jagdeep Cheema (30), Ravnder Sarma (35) Barinder Dhaliwal (39) Andy St. Pierre (40) Gurpreet Dhaliwal (35) Richard Joseph Whitlock (40), Amroop Gill (29), Sukhdeep Pansal (33) and Sumdish Gill (28). இது தொடர்பாக CFSEU உதவி கமாண்டர் மேன்னி மான் கூறுகையில், பட்டியலிடப்பட்டவர்களை அவர்களது எதிராளிகள் குறி வைக்கும் வாய்ப்புள்ளது.
பட்டியலிடப்பட்டவர்களால் அவர்களது நண்பர்கள், குடும்பத்தினரும் ஆபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 11 பேர் கொண்ட பட்டியலில் இருந்த மெனிந்தர் தலிவால், கடந்த மாத இறுதியில் விஸ்லரில் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து இந்த எச்சரிக்கை வந்துள்ளது.
கடந்த ஆண்டு வான்கூவரில் உள்ள நிலக்கரி துறைமுகத்தில் அவரது சகோதரர் ஹர்பிரீத் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மற்றொரு சகோதரரான 35 வயதான குர்பிரீத் தலிவால் இந்த ஆண்டு வன்முறை கும்பல் பட்டியலில் உள்ளார்.
இதற்கிடையில், வான்கூவர் பொலிஸ் பிரதிநிதி கூறுகையில், மாகாணத்தின் மிகப்பெரிய பொலிஸ் திணைக்களம் பிரச்சினையை எதிர்த்துப் போராடுவதற்கு இரகசிய வேலைகளைச் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.