என்னுடைய வாழ்க்கையில் நான் கல்லூரிக்கே போனதில்லை: இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் உருக்கம்
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தன்னுடைய வாழ்க்கையில் கல்லூரிக்கே போனதில்லை என, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் Anthem வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உருக்கமாக பேசியுள்ளார்.
ஆஸ்கார் நாயகன் ரகுமான்
தமிழர்களால் ஆஸ்கார் நாயகன் என பெருமையுடன் அழைக்கப்படும் ஏ.ஆர் ரகுமான்(arrahman) தனது இளமைக் காலத்தில் இசையின் மீது கொண்ட ஆர்வத்தால் கல்லூரிக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
மேலும் இளம் வயதிலே தந்தையை இழந்த அவர் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளார். பிரபல இசையமைப்பாளர்களுக்கு இசைக்கருவிகளை வாசிப்பதன் மூலம் கிடைக்கும் சம்பளத்தை கொண்டு, தன் குடும்பத்தின் வறுமையை போக்கியுள்ளார்.
@indiaglitz
இவர் கே.பாலசந்தரின் தயாரிப்பில் மணி ரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் பாலசந்தரால் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டார்.
முதல் படத்திலேயே தன்னுடைய திறமையால் பலரது ரசிகர்களை பெற்ற திலிப் குமார், இஸ்லாமிய மதத்தின் மீதுள்ள ஈடுபாட்டால் தனது பெயரை ஏ.ஆர் ரகுமான் என மாற்றிக் கொண்டார்.
கல்லூரிக்கு போனதில்லை
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் Anthem வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு, மாணவர்களிடம் பேசிய ஏ.ஆர்.ரகுமான் சுவாரஸ்யமான பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.
”நான் என்னுடைய வாழ்க்கையில் கல்லூரிக்கே போனதில்லை. என்னை யாராவது கல்லூரி விழாவிற்கு அழைத்தால் நான் மிகவும் உற்சாகமாகி விடுவேன். இங்கு இருக்கும் மாணவர்கள் தான் நாளைய எதிர்காலம். அதை கட்டமைக்க போகிறவர்கள் இவர்கள் தான்” என ஏ.ஆர் ரகுமான் பேசியுள்ளார்.
இவரது இசையில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் சில மாதங்கள் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கான இசைக்காக மூன்று ஆண்டுகள் எடுத்து கொண்டதாக ஏ.ஆர் ரகுமான் கூறியுள்ளார்.
.@arrahman sir is all set to make your weekend extra special with the #PSAnthem !#CholasAreBack#PonniyinSelvan2 #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @RedGiantMovies_ @Tipsofficial @tipsmusicsouth @IMAX @primevideoIN @SunTV #PenMarudhar @SVC_official… pic.twitter.com/ngVpQ5PiZu
— Lyca Productions (@LycaProductions) April 14, 2023
”பாலி, லண்டன், துபாய், சென்னை, மும்பை ஆகிய இடங்களில் இந்த பாடலுக்காக வொர்க் செய்துள்ளோம். இந்த கீதம் மணி சாரின் யோசனை தான். இந்தியில் அர்ஜித் சிங் பாடியுள்ளார், தமிழில் என்னை பாட சொன்னார்கள்.” என ஏ.ஆர்.ரஹ்மான் பேசியுள்ளார்.