அறிவியலாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள அபூர்வ உயிரினம்: முதன்முறையாக பிரித்தானியாவில் கண்டுபிடிப்பு...
பிரித்தானியக் கடற்பகுதி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அரிய வகை உயிரினம் ஒன்று அறிவியலாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மனிதனின் சுண்டுவிரல் அளவே உள்ள, பளிச்சென்ற வண்ணம் கொண்ட Babakina anadoni என்ற அந்த ஓடில்லாத நத்தை வகை உயிரினம் பொதுவாக ஸ்பெயின் கடற்பகுதிகளில்தான் காணப்படும்.
ஆனால், முதன்முறையாக பிரித்தானியாவின் Isles of Scilly பகுதியில் இந்த உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அறிவியலாளர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.
இதுவரை பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்படாத இந்த உயிரினம் தற்போது Isles of Scilly பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ள பிரித்தானிய கடல்வளத்துறை அதிகாரியான Matt Slater, நான் இதுவரை பார்த்த உயிரினங்களிலேயே இதுதான் மிகவும் அழகான sea slug வகை உயிரினம் என்கிறார்.
Image: JulieVMac/iStockphoto