மின்கம்பம் சாய்ந்ததில் நூலிழையில் உயிர் தப்பிய ஆ.ராசா எம்பி
மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது மின்கம்பம் சாய்ந்ததை அறிந்த ஆ.ராசா எம்பி சற்று விலகியதால் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.
உயிர் தப்பிய ஆ.ராசா எம்பி
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை திடீரென வானிலை மாறி ஆங்காங்கே சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது.
முக்கியமாக திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி மற்றும் பெரியப்பாளையம் ஆகிய பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதனிடையே மயிலாடுதுறை மாவட்டத்தில் திமுக சார்பில் நடைபெற்ற பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் திமுக எம்பி. ஆ.ராசா பங்கேற்றார்.
அப்போது அவர் மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசியதால் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்குகள் திடீரென சாய்ந்தது.
அது நேராக போடியம் மீது விழுந்ததை அறிந்த அவர் சுதாரித்துக் கொண்டு விலகியதால் உயிர் தப்பினார். பின்னர் அவர் அங்கிருந்து உடனடியாக புறப்பட்டு சென்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |