எப்போது ஜேர்மனியிலிருந்து நாடுகடத்தப்படுவோமோ என்ற பயத்துடன் வாழ்ந்துவந்த அகதிக்குடும்பம்: இன்று?
எப்போதுவேண்டுமானாலும் ஜேர்மனியிலிருந்து நாடுகடத்தப்படுவோம் என்ற பயத்துடனேயே வாழ்ந்து வந்த அகதிக்குடும்பத்திலிருந்து, ஒரு பெண் இன்று ஜேர்மன் அமைச்சராகியிருக்கிறார்.
1992ஆம் ஆண்டு மாலியிலிருந்து ஜேர்மனிக்கு அகதிகளாக வந்தனர் ஒரு தம்பதியர். அந்த தம்பதியருக்கு ஜேர்மனியில் பிறந்த பிள்ளைகளில் ஒருவர்தான் Aminata Touré (29).
அவர் சிறுபிள்ளையாக இருக்கும்போது, ஒவ்வொரு வாரமும், இந்த வாரம் நாம் நாடுகடத்தப்பட்டுவிடுவோமா என்ற கேள்வி அந்தக் குடும்பத்தில் ஓடிக்கொண்டே இருக்குமாம். 12 ஆண்டுகள் பயந்துகொண்டே வாழ்ந்த பிறகுதான் அவர்களுக்கு ஜேர்மன் குடியுரிமை கிடைத்திருக்கிறது.
இப்போது Christian Democrat-Green கூட்டணி ஆட்சியில் ஒரு கேபினட் அமைச்சராகியிருக்கிறார் Aminata. Schleswig-Holstein மாகாணத்தில் சமூக விவகாரங்கள் துறை அமைச்சராகியிருக்கிறார் அவர்.
credit - Michael Brandtner / Wikimedia Commons
இன்னொரு குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், Aminata ஒரு கருப்பினப்பெண்!
தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஒரு கருப்பினக் குழந்தை Aminataவைப் பார்த்து உற்சாகமாக கையசைக்க, அவரது தாய் Aminataவிடம், ஒரு கருப்பினப்பெண்ணை ஜேர்மன் தொலைக்காட்சியில் கண்ட தன் மகள் மிகவும் ஆச்சரியப்பட்டதாக கூறியதாக தெரிவிக்க, கிட்டத்தட்ட கண்ணீர் வழிய, அந்தக் குழந்தையை அள்ளி அணைத்துக்கொண்டாராம் அவர். தான் ஒரு அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டது அந்தக் கருப்பினக் குழந்தையின் கண்களீல் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை தான் உணர்ந்துகொண்டதாக தெரிவிக்கிறார் Aminata.
தனது குடும்பம் அனுபவித்த மற்றும் தனது சொந்த அனுபவங்களை தனது பணிக்குள் கொண்டுவருவது மிகவும் முக்கியமான ஒன்று என்று கூறும் Aminata, ஒரு அகதியாக, எப்போது மாலிக்கு நாடுகடத்தப்படுவோம் என்ற பயத்தின் தங்கள் குடும்பம் வாழ்ந்துவந்ததையும், ஒரு கல்வியாளரான தன் தாயின் கல்வித்தகுதி ஜேர்மனியில் ஏற்றுக்கொள்ளப்படாததால், அவர் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டதையும் தன்னால் மறக்க முடியாது என்கிறார்.
எல்லாவற்றிற்கும் மேல், ஜேர்மனியில் கேபினட் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள முதல் கருப்பினப்பெண் Aminata என்பது குறிப்பிடத்தக்கது.
credit - africanshapers
credit - africanshapers