சுவிஸ் உணவகத்தை நோக்கி உருண்டு வந்த பாறை: அதிர்ஷ்டவசமாக தப்பிய மக்கள்
சுவிஸ் மாகாணம் ஒன்றில் உணவகம் ஒன்றை நோக்கி வேகமாக உருண்டுவந்த பாறை ஒன்று, உணவகத்தின் மீது மோதாமல் நின்றதால், உணவகத்திலிருந்தோர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்கள்.
மயிரிழையில் உயிர் தப்பிய வாடிக்கையாளர்கள்
Valais மாகாணத்திலுள்ள உணவகம் ஒன்றை நோக்கி மலையிலிருந்து பெயர்ந்த பெரிய பாறை ஒன்று உருண்டு வந்துள்ளது.
15 மீற்றர் நீளமும் 3 மீற்றர் அகலமும் கொண்ட அந்த பாறை, ஒரு திராட்சைத்தோட்டத்தை நாசம் செய்துவிட்டு, சாலை ஒன்றைக் கடந்து அந்த உணவகத்துக்கு சில மீற்றர்கள் முன் நின்றுவிட்டது.
இந்த சம்பவத்தில், நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஒன்று சேதமானது. ஆனால், மனிதர்கள் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.