ஜேர்மனியால் பிடித்துவைக்கப்பட்டிருந்த ரஷ்யக் கப்பல்: அதிகாரிகள் எடுத்துள்ள முடிவு
ரஷ்யாமீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடைகளைத் தொடர்ந்து ஜேர்மனியில் பிடித்து வைக்கப்பட்டிருந்த ரஷ்யக் கப்பல் ஒன்றை விடுவிப்பதென ஜேர்மன் அதிகாரிகள் முடிவு செய்ததைத் தொடர்ந்து, தற்போது அந்தக் கப்பல் விடுவிக்கப்பட்டுள்ளது.
பழுதுபார்ப்பதற்காக ஜேர்மனிக்கு வந்த கப்பல்
ரஷ்யாவிலிருந்து வட அமெரிக்காவுக்குச் சென்றுகொண்டிருந்த Atlantic Navigator II என்னும் சரக்குக் கப்பல், மார்ச் மாத துவக்கத்தில் பழுதுபார்ப்பதற்காக ஜேர்மனியின் Rostock துறைமுகத்தை வந்தடைந்தது.
அப்போது, ஐரோப்பிய ஒன்றிய துறைமுகங்களுக்குள் நுழையும் அனைத்துக் கப்பல்களும் சுங்கச் சோதனை மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்குறைகளுக்குக் கட்டுப்படவேண்டும் என்று கூறி, அந்தக் கப்பலை பிடித்துவைக்க ஜேர்மன் சுங்க அதிகாரிகள் கட்டளையிட்டார்கள்.
தற்போது அதிகாரிகள் எடுத்துள்ள முடிவு
இந்நிலையில், அந்தக் கப்பலை விடுவிக்க ஜேர்மன் சுங்க அதிகாரிகள் தற்போது முடிவு செய்ததைத் தொடர்ந்து, அந்தக் கப்பல் விடுவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கப்பல் புறப்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இந்த தகவலை ஜேர்மன் சுங்கத்துறை அலுவலக செய்தித்தொடர்பாளர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |