இன்னொரு நாட்டைத் தாக்கும் தார்மீக உரிமை நமக்கு கிடையாது: பிரான்சில் புகலிடம் கோரியுள்ள ரஷ்ய வீரர்
ரஷ்ய இராணுவத்தில் நிலவும் ஊழல், குழப்பம் குறித்து சமூக ஊடகம் ஒன்றில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார் உக்ரைன் போரை ஆதரிக்காத ரஷ்ய வீரர் ஒருவர்.
அதைத் தொடர்ந்து, ரஷ்யாவால் தண்டிக்கப்படும் அபாயம் உள்ளதால் பிரான்சுக்கு தப்பி வந்துள்ளார் அவர்.
இன்னொரு நாட்டைத் தாக்கும் தார்மீக உரிமை நமக்கு கிடையாது, அதுவும் அந்த நாடு நமக்கு நெருக்கமான ஒரு நாடாக இருக்கும்போது, என்கிறார் பிரான்சில் புகலிடம் கோரியுள்ள ரஷ்ய வீரர் ஒருவர்.
தனது தந்தை பணி செய்துவந்த ரஷ்ய இராணுவத்தின் விமானப்படையில் Pavel Filatiev (34) இணைந்தபோது, அவரை சிறப்பு ஆபரேஷன் என்று கூறி உக்ரைனுக்கு அனுப்பினார் ரஷ்ய ஜனாதிபதியான புடின்.
இரண்டு மாதங்கள் Kherson மற்றும் Mykolaiv நகரங்களைச் சுற்றிவந்த Pavelக்கு கண்களில் தொற்று ஏற்பட, படையிலிருந்து வெளியேறி மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார் அவர்.
image - AFP
இன்னொரு நாட்டைத் தாக்கும் தார்மீக உரிமை நமக்கு கிடையாது, அதுவும் அந்த நாடு நமக்கு நெருக்கமான ஒரு நாடாக இருக்கும்போது, என்று கூறும் Pavel, தன் உடல்நிலையைக் காரணம் காட்டி இராணுவத்திலிருந்து ராஜினாமா செய்ய முயன்றபோது, போருக்குத் திரும்பவில்லையென்றால் விசாரணையை எதிர்கொள்ளவேண்டிவரும் என எச்சரிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ரஷ்ய இராணுவம் குறித்த பல தகவல்களை கட்டுரையாக எழுதி சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ளார் Pavel.
இராணுவத்தில் காணப்படும் ஊழல், குழப்பம் குறித்து தெளிவாக விளக்கியுள்ள Pavel, உக்ரைனில் தான் சார்ந்த படைப்பிரிவு, பொதுமக்கள் மீதோ, போர்க்கைதிகள் மீதோ எந்த தாக்குதலும் நடத்தவில்லை என்கிறார்.
இராணுவத்தில் பணிபுரியும் 10 சதவிகிதம் வீரர்கள் மட்டுமே போரை ஆதரிப்பதாக தெரிவிக்கும் Pavel, மற்றவர்கள் அது குறித்து வெளியே சொல்லவும், பின்விளைவுகள் குறித்தும் பயந்துபோய் இருப்பதாக தெரிவிக்கிறார்.
Pavelஇன் கட்டுரை சமூக ஊடகங்களில் வெளியானதால் அவரைப் பிடித்து 15 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க ரஷ்ய அதிகாரிகள் திட்டமிட்டிருப்பது தெரியவந்ததும் பிரான்சுக்கு தப்பியோடிவந்துள்ளார் அவர்.
பிரான்சில் புகலிடம் கோரியிருக்கும் Pavel, புகலிடம் கிடைத்தால் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பில் பணியாற்ற விரும்புவதாக தெரிவிக்கிறார்.