இந்திய வம்சாவளி பிரித்தானிய சிறுவனை இன ரீதியாக விமர்சித்த சக மாணவன்... குவியும் ஆதரவு
இந்திய வம்சாவளி பிரித்தானிய சிறுவன் ஒருவனை வெள்ளையினத்தவரான சக மாணவன் ஒருவன் இன ரீதியாக விமர்சித்துள்ளான்.
நன்றாக சென்றுகொண்டிருந்த பள்ளிப்படிப்பு, Cory என்ற அந்த வெள்ளையினச் சிறுவன் வந்ததும் தொல்லையாகியிருக்கிறது இந்தச் சிறுவனுக்கு...
இந்த இந்திய வம்சாவளிச் சிறுவனை கேலி செய்வதையே குறியாகக் கொண்ட அந்த வெள்ளையினச் சிறுவன், நீ ஒரு பிரித்தானிய சிறுவன் என்று சொல்லும் அளவுக்கு உயரமாக இல்லையே, ஒருவேளை உன் உடலில் உள்ள இந்திய ஜீன் காரணமாக நீ குள்ளமாக இருக்கக்கூடும் என்று கூறியிருக்கிறான்.
இன்னொரு முறை, வகுப்பில் கணிதப் பாடம் ஒன்றில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதில் தெரியாததால்,மீண்டும் அவனை கேலி செய்திருக்கிறான் Cory.
உனக்கு பதில் தெரியுமா? கமான் மேன், உன் இந்திய மூளையை பயன்படுத்து, உன் மூதாதையர்களை பெருமைப்படுத்து என்று கூறியிருக்கிறான் Cory.
இந்த சிறுவன் எனக்கு பதில் தெரியவில்லை என்று கூற, ஐயோ, இந்திய தேசமே உனக்காக அழுகிறதே என்று Cory கூற, அவன் கூறியதை வகுப்பு ஆசிரியை கவனித்துவிட்டிருக்கிறார்.
உடனே, நடந்ததை மற்ற மாணவர்கள் மூலமும் உறுதி செய்த அந்த ஆசிரியை, Coryயை தலைமையாசிரியரிடம் அனுப்பியுள்ளார்.
அந்த பள்ளி இன ரீதியான விமர்சனங்களை கடுமையாக எடுத்துக்கொள்ளும் பள்ளி. ஆகவே, Cory பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டான்.
ஆனால், தான் செய்தது சரியா, ஒருவேளை ஆசிரியரிடம் கூறாமல், தானே அவனிடம் பேசியிருக்கலாமோ என்ற குழப்பம் இந்த இந்திய மாணவனுக்கு.
சமூக ஊடகம் ஒன்றில், தனக்கு நடந்ததைக் கூறி, மக்களிடம் கருத்துக் கேட்டிருக்கிறான் அவன். அவன் செய்தது சரிதான் என்று கூறியுள்ள பெரும்பான்மையோர், அந்த சிறுவனை வெளியேறியது சரிதான். அப்போதுதான் அவன் வளரும்போதாவது திருந்துவான் என்று கூறியதோடு, அவனுக்கு தங்கள் ஆதரவையும் தெரிவித்துள்ளார்கள்.