3 இதயங்கள், 9 மூளைகளை கொண்ட உயிரினம்: எது தெரியுமா?
ஆக்டோபஸ் என்பது மெல்லுடலி தொகுதியைச் சேர்ந்த கடல்வாழ் குடும்பம் ஆகும்.
மூன்று இதயங்கள், 9 மூளைகளை கொண்ட கடல்வாழ் உயிரினம் ஆக்டோபஸ்.
ஆக்டோபஸால் மனிதர்களை அடையாளம் காண முடியும். இவை மிகவும் புத்திசாலித்தனம் வாய்ந்த உயிரினம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
பொதுவாக ஆக்டோபஸில் 300 வகையான இனங்கள் உள்ளன. அவை அனைத்திற்குமே மூன்று இதயங்கள் உள்ளன.
ஒரு இதயம் அவற்றின் இரத்த ஓட்ட அமைப்பு முழுவதும் கட்டுப்படுத்த உதவுகிறது. மற்ற இரண்டு இதயங்களும் அதனின் செவுள்கள் வழியாக இரத்தத்தை பாயசெய்ய உதவுகிறது.
எந்த கடலிலும், எந்த ஆழத்திலும் ஆக்டோபஸை காணலாம். மேலும் அவை தங்களின் நிறம் மற்றும் வடிவத்தை மாற்றும் குறிப்பிடத்தக்க திறனைக் கொண்டுள்ளன.
மேலும் இவற்றின் உடலில் எலும்பு இல்லாததால், மிகச் சிறிய இடுக்குகளிலும் அவற்றால் நுழைந்து வெளிவர இயலும்.
இவற்றுக்கு ஒன்பது மூளைகள் உண்டு. அதில் ஒரு மைய மூளை நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்துகிறது. மற்ற எட்டு மூளைகளும் அவற்றின் எட்டு கைகளிலும் உள்ளது.
மேலும் இதன் இரத்தம் நீல நிறத்தில் உள்ளது. இதற்கு காரணம் இதன் இரத்தத்தில் உள்ள ஹீமோசயனின் என்ற செப்பு நிறைந்த புரதம் தான்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |