ஓபரா பேட்டியின்போது மகாராணியாரைக் குறித்து மேகன் கூறிய ஒரு இரகசிய சம்பவம்: ஆதார வீடியோ வெளியானது
ஹரிக்கும் மேகனுக்கும் இளவரசர் சார்லஸ் மீதும், வில்லியம், கேட் மீதும்தான் கோபம் போலிருக்கிறது.
காரணம், ஓபரா பேட்டியின்போது, தப்பித்தவறி கூட பாட்டியான மகாராணியாரையோ, தாத்தாவான இளவரசர் பிலிப்பையோ அவர்கள் ஒரு வார்த்தை கூட தவறாக கூறவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
தங்கள் குழந்தையின் நிறம் பற்றி குடும்பத்தில் ஒருவர் விமர்சித்ததாக அதிரடியாக இனவெறுப்புக் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தபோதுகூட, அதை கூறியது மகாராணியாரோ அல்லது இளவரசர் பிலிப்போ அல்ல என்பதை அவர்கள் தங்கள் பேட்டியின்போது தெளிவுபடுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள அந்த பேட்டியின்போது, மேகன் ஒரு குறிப்பிட்ட விடயத்தை நினைவுகூர்ந்தார்.
அப்போது மேகனும் மகாராணியாரும் முதன்முறையாக பொது நிகழ்ச்சி ஒன்றிற்காக Cheshire என்ற இடத்திற்கு சென்றிருந்தார்கள்.
அந்த நிகழ்ச்சி முடிந்து காரில் ஏறும்போது, காருக்குள் குளிர்ச்சியாக இருந்ததாகவும், அப்போது தன் கால்களை மூடிக்கொள்வதற்காக போர்வை ஒன்றை எடுத்த மகாராணியார், மேகனிடம் நீயும் போட்டுக்கொள் என்பது போல் சைகை காட்டிவிட்டு, அந்த போர்வையை தன் கால்கள் மீதும் மேகன் கால்கள் மீதும் போட்டாராம். அதை தனது பேட்டியில் கூறியிருந்தார் மேகன்.
இந்நிலையில், தற்போது அந்த சம்பவத்தைக் காட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், மேகனின் கால்களையும் மகாராணியார் போர்வையால் மூடிவிடும் அந்த நெகிழவைக்கும் காட்சியைக் காணலாம்.
ஆக, ஹரிக்கும் மேகனுக்கும் பிரச்சினை தாத்தா பாட்டியுடன் இல்லை! அப்படியானால் யாருடன்?

