மன்னர் சார்லஸ் வீட்டுக்குள் ஒரு இரகசிய அறை: தீவிரவாதிகள் தாக்கினால் தப்புவதற்காகவாம்!
மன்னர் சார்லசுக்கு சொந்தமான ஒரு வீட்டில், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் தப்புவதற்காக அறை ஒன்று உள்ளது.
தாக்குதலில் அந்த வீடு முழுவதும் இடிந்து விழுந்தாலும், அந்த அறை மட்டும் தாக்குப்பிடித்து நிற்குமாம்.
பிரித்தானிய மன்னர் சார்லசுக்கு சொந்தமான வீடு ஒன்றில், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் தப்புவதற்காக ஒரு இரகசிய அறை இருப்பதைக் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
1980ஆம் ஆண்டு, டயானாவைத் திருமணம் செய்வதற்கு முன், Highgrove House என்னும் ஒரு வீட்டை வாங்கினாராம் சார்லஸ்.
Gloucestershireஇல் அமைந்துள்ள அந்த வீட்டில், எஃகு சுவர் கொண்ட ஒரு அறை உள்ளதாம்.

Image: Tim Graham Photo Library via Getty Images
அதாவது, ஒருவேளை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் தப்புவதற்காக அந்த அறை உருவாக்கப்பட்டதாம். தாக்குதலில் அந்த வீடு முழுவதும் இடிந்து விழுந்தாலும், அந்த அறை மட்டும் தாக்குப்பிடித்து நிற்கும் என்கிறார் ராஜகுடும்ப எழுத்தாளரான Brian Hoey என்பவர்.
அந்த அறையைவிட, அறைக்குள் இருக்கும் விடயங்கள் சுவாரஸ்யமானவை. அங்கு, மருந்துப்பொருட்கள், சார்லஸ் மற்றும் கமீலாவின் இரத்தவகை மாதிரிகள், நீண்ட நாட்கள் கெட்டுப்போகாத உணவுகள் மற்றும் பானங்கள், ஆயுதக்கிடங்கு, ரேடியோ ட்ரான்ஸ்மிட்டர்கள், காற்றை சுத்திகரிக்கும் கருவிகள் மற்றும் ரசாயனக் கழிவறைகள் ஆகியவை உள்ளனவாம்.
பல வாரங்களுக்கு ராஜகுடும்பத்தினர் அங்கு தங்கும் வகையில் அந்த அறை அமைக்கப்பட்டுள்ளது என்கிறார் Brian Hoey.

Topbunt

Image: Jason Ingram/Highgrove Enterprises/PA Wire