பிரித்தானியாவில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான இரகசிய சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு!
பிரித்தானியாவின் South Wales-ல் மின்சார வல்லுநர்களால் ஒரு ரகசிய இடைக்கால சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Monmouthshire-ல் உள்ள Wye Valleyயில் அவர்கள் ஒரு மின் கம்பத்தை நடுவதற்கா பணிபுரிந்த ஒப்பந்தக்காரர்களின் குழு தொடும் பணியில் ஈடுபட்டபோது இந்த இடைக்காலத்தைச் சேர்ந்ததாக நம்பப்படும் சுரங்கப்பாதையை கண்டுபிடித்துள்ளது.
தற்போது இப்பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொல்லப்படுகிறது.
முதற்கட்ட ஆய்வில் இந்த சுரங்கப்பாதை மனிதனால் உருவாக்கப்பட்டதாகவும், சுமார் 4 அடி உயரம் கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை1000 ஆண்டுகள் பழனையானதாக இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.
இந்த சுரங்கப்பாதை 1700-களில் இருந்த எந்தவொரு ordinance survey வரைபடத்திலும் காட்டப்படவில்லை, மேலும் உள்ளூர்வாசிகள் அல்லது அதிகாரிகள் எவருக்கும் இந்த குறிப்பிட்ட சுரங்கப்பாதை அமைப்பைப் பற்றிய எந்த அறிவும் இல்லை என்றும், இது குறித்த எந்த பதிவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
