நாடாளுமன்றத்தில் மீண்டும் ஒரு பாலியல் புகார்! மன உளைச்சலில் பிரதமர் ஸ்காட் மோரிசன்
அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே குற்றம் சாட்டப்பட்டுள்ள அதே நபர் மீது மேலும் ஒரு பாலியல் புகார் முன் வைக்கப்பட்டுள்ளது.
2019-ஆம் ஆண்டு பிரதமர் ஸ்காட் மோரிசனின் ஆளும் லிபரல் கட்சியில் பணியாற்றிய ஒரு முன்னாள் அரசாங்க ஆலோசகர் தன்னை நாடாளுமன்ற வளாகத்திலேயே வைத்து பாலியல் பலாத்காரம் செய்தாக சக ஊழியரான பிரிட்டனி ஹிக்கின்ஸ், கடந்த வாரம் வெளிப்படையாக புகார் அளித்தார்.
இந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்டப் பெண்ணிடம் பிரதமர் ஸ்காட் மோரிசன் மன்னிப்பு கேட்டார். பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இந்நிலையில், மீண்டும் அதே நபர் மீது மேற்றோரு பெண் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.
இதனால் பிரதமர் ஸ்காட் மோரிசன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பணியிட கலாச்சாரத்தை மாற்ற நிறைய வேலைகள் செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.