என் மனைவி ஒருநாள் தனியாக அமர்ந்து சாப்பிடும் நிலை வரலாம்: புற்றுநோயுடன் போராடிவரும் இலங்கைத் தமிழர்
இலங்கையில் பிறந்து, பிரித்தானியாவில் பிபிசி தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் ஜார்ஜ் அழகையா குடல் புற்றுநோயால் அவதியுற்று வருகிறார்.
பிபிசியில் பணியாற்றுவது மனதுக்கு உற்சாகம் அளிப்பதாக தெரிவிக்கிறார் அவர்.
இலங்கையில் பிறந்து, பிரித்தானியாவில் பிபிசி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவர் ஜார்ஜ் அழகையா (66).
குடல் புற்றுநோயுடன் போராடி வரும் அழகையா, கடந்த 18 மாதங்களாக தான் கடுமையான வலியால் அவதியுற்று வருவதாக தெரிவித்துள்ளார். அவரது முதுகுத்தண்டின் அருகில் உருவாகியுள்ள ஒரு கட்டி அவருக்கு கடுமையான வலியை ஏற்படுத்தி வருவதாகவும், அதனால், படுத்திருப்பது கூட கடினமாக உள்ளதாகவும் தற்போது தெரிவித்துள்ளார்.
ஆனாலும், பிபிசியில் பணியாற்றுவது மனதுக்கு உற்சாகம் அளிப்பதாக தெரிவிக்கிறார் அவர்.
image PHILIP IDE
காலை முதல் மாலை வரை பணியாற்றுவதால் உடல் தளர்ந்துபோவது உண்மைதான் என்றாலும், அது என் மனதை உற்சாகமூட்டுவதாக உள்ளது என்கிறார் அழகையா.
இலங்கையில் பிறந்தவரான அழகையா, சமீபத்தில் புற்றுநோயால் உயிரிழந்த தன் சக செய்தியாளரான Bill Turnbull (66)க்கு தனது அஞ்சலியை செலுத்தும் அதே நேரத்தில், உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்துவருவோருக்கு அவர் நல்ல ஒரு முன்மாதிரியை அமைத்துக்கொடுத்துள்ளதாக பாராட்டுகிறார்.
லண்டனில் தனது மனைவி Francesஉடன் வாழ்ந்துவரும் அழகையா, கடைசி வரை அவளுடைய கைகளைப் பிடித்துக்கொண்டே வாழ்ந்துவிடவேண்டும் என்பது என் ஆசைகளில் ஒன்று என்கிறார்.
ஜன்னல் வழியாக, தோட்டத்திலுள்ள மேசையில் மேசை விரிப்பை விரிக்கும் என் மனைவியைப் பார்க்கும்போது, ஒரு நாள் அவள் மட்டும் அந்த மேசையின் முன் அமர்ந்து தனியாக உணவருந்தவேண்டியிருக்குமோ என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன் என்கிறார் அழகையா.