பிரித்தானியாவுக்கு வந்து ஒரு ஆண்டுக்குள் கல்வியில் சாதித்துக்காட்டியுள்ள இலங்கைப் பெண்
பிரித்தானியப் பள்ளி ஒன்றில் பயிலும் இலங்கை மாணவி ஒருவர் GCSE தேர்வுகளில் உயரிய மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்
அவர் இலங்கையிலிருந்து கடந்த செப்டம்பரில்தான் பிரித்தானியா வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவின் Gloucestershireஇல் உள்ள பள்ளி ஒன்று, பிரித்தானியாவுக்கு வந்து ஒரு ஆண்டு ஆவதற்குள் கல்வியில் சாதித்துக்காட்டியுள்ள இலங்கைப் பெண் ஒருவருக்கு புகழாரம் சூட்டியுள்ளது.
Gloucestershireஇல் உள்ள Stroud High School என்ற பள்ளியில் படிக்கும் Udarna Jayawardena என்ற மாணவி, கடந்த செப்டம்பரில்தான் இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்துள்ளார்.
Image: Stroud High School
வந்து ஒரு ஆண்டு ஆவதற்குள், GCSE தேர்வுகளில் ஒன்பது grade 9 என்னும் உயரிய மதிப்பெண்களைப் பெற்றுள்ளார் Udarna.
இத்தனைக்கும், இப்போது அவர் தேர்ந்தெடுத்துள்ள பாடங்களை அவர் இதற்குமுன் படித்ததே இல்லையாம். முதன்முறையாக படித்த பாடங்களிலேயே சிறந்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார் Udarna.