12 ஆம் வகுப்பில் 39 சதவீத மதிப்பெண் பெற்றவர்.., ஆங்கிலம் தெரியாமல் IIT JEE தேர்வில் தேர்ச்சி
12 ஆம் வகுப்பில் 39 சதவீத மதிப்பெண் பெற்ற நபர் ஒருவர் IIT JEE தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
IIT JEE தேர்வில் தேர்ச்சி
இந்திய மாநிலமான ராஜஸ்தானைச் சேர்ந்தவர் ராஜீவ் தண்டோதியா. இவரது தந்தை சிறிய தொழிற்சாலையை நடத்தி வந்தார். அவரது தாயார் ஒரு இல்லத்தரசி.
இவர் சமோத் மற்றும் தோல்பூரில் உள்ள அரசுப் பள்ளிகளில் பள்ளிப் படிப்பை முடித்தார். இந்த பள்ளியில் ஆசிரியர்கள் குறைவாக இருந்ததால் மாணவர்கள் டியூஷன் சென்று படிக்க வேண்டிய நிலை காரணமாக 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் 39% மட்டுமே மதிப்பெண் மட்டுமே பெற்றார் ராஜீவ் தண்டோதியா.
ஆனால், 1995 ஆம் ஆண்டு வேதியியலில் கருணை மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார்.
பின்பு, பள்ளிப் படிப்பை முடித்த பிறகு தனது தந்தையின் தொழிற்சாலையில் சேர்ந்தார். அப்போது அவர்கள் சிரமங்களை எதிர்கொண்டதால் சில ஆண்டுகளுக்குப் பிறகு வணிகம் மூடப்பட்டது.
அவர் BSc படிப்பில் சேர முயன்ற போது குறைந்த மதிப்பெண்களால் அறிவியல் படிப்புகளுக்கும், ராஜஸ்தானில் PET தேர்வுக்கான பயிற்சிக்கும் தகுதியற்றவராக இருந்தார்.
இதையடுத்து, புத்தக விற்பனையாளரிடம் ஆலோசனை கேட்டு IIT-JEE தேர்வை தேர்வு செய்தார் ராஜீவ் தண்டோதியா.
அவருக்கு ஏற்பட்ட ஆங்கில தடையால் அகராதியைப் பார்த்து படித்து 2000 ஆம் ஆண்டு IIT JEE தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் IIT-காரக்பூரில் தொழில்துறை பொறியியல் மற்றும் மேலாண்மையில் 5 ஆண்டு இரட்டைப் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார்.
மேலும், ஸ்வீடனின் லூலியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் முடித்த பிறகு ஸ்வீடிஷ் நிறுவனமான டெட்ரா பாக்கில் மூத்த பகுப்பாய்வு நம்பகத்தன்மை பொறியாளராகச் சேர்ந்து அங்கேயே வசிக்கிறார் தண்டோதியா.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |