“ஒரு சூப்பர் ஸ்டார் சகாப்தம் முடிந்துவிட்டது” வைரலாகும் பதிவு
“திரையுலகில் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற சகாப்தம் முடிந்துவிட்டது” என தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சூப்பர் ஸ்டார்
ஆபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றிய ரஜினிகாந்திற்கு, 1978 ஆம் ஆண்டு வெளியான பைரவி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கிடைத்தது.
இவரது ஸ்டைலுக்காகவே ரசிகர்கள் கொண்டாடுகின்றனர், இன்னும் ஹீரோவாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
வருகின்ற ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஜெயிலர் திரைப்படமானது திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.
இசை வெளியீட்டு விழா
இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி, தமன்னா, இயக்குநர் நெல்சன், அனிருத், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் கலாநிதி மாறன் "ரஜினிக்கு 72 வயது ஆன போதிலும் தயாரிப்பாளர்கள் அவரது கால்ஷீட்டுக்காக வரிசையில் நிற்கிறார்கள். அப்படி உங்களுக்கும் நின்றால் நீங்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் என" பேசியுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் முகமாக எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
எஸ்.ஆர்.பிரபு கருத்து
அதில் "திரைத்துறையில் ஒரு சூப்பர் ஸ்டாரின் சகாப்தம் முடிந்துவிட்டது. ஒவ்வொரு நட்சத்திரமும் அவரவருக்கு ஏற்றாற் போல மார்கெட் வைத்துள்ளனர். இதன் மதிப்பும் வெளியீட்டு தேதி, உள்ளடக்கம், போட்டி போன்றவற்றின் அடிப்படையில் மாறுபடும். தற்போது சினிமா வியாபாரம் எல்லைகளை கடந்து விரிந்துவிட்டது. அதற்கான சிறந்த உதாரணம் தெலுங்கு திரையுலகம்" என தெரிவித்துள்ளார்.
The era of one superstar is over in film business. Every star has his own market share and for each film, the value varies based on release date, content, combination, competition, etc.,
— SR Prabu (@prabhu_sr) July 29, 2023
The industry which understands this start to support each other, uplift the whole market…
இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |