நாடாளுமன்ற முடிவை மீறி வெளிநாட்டவர் ஒருவருக்கு குடியுரிமை வழங்கிய சுவிஸ் நீதிமன்றம்...
மாகாண நாடாளுமன்ற முடிவை மீறி, வெளிநாட்டவர் ஒருவருக்கு சுவிஸ் குடியுரிமை வழங்கியுள்ளது சுவிஸ் நீதிமன்றம் ஒன்று.
சிறுவயதில் சிறு திருட்டு ஒன்றில் ஈடுபட்டதற்காக அவருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டிருந்தது.
Aargau மாகாணத்தில் 18 வயது இளைஞர் ஒருவருக்கு மாகாண நாடாளுமன்ற முடிவை மீறி சுவிஸ் குடியுரிமை வழங்கியுள்ளது நீதிமன்றம் ஒன்று.
அவர் சிறுவயதில் ஒரு USB ட்ரைவையும், சட்டை ஒன்றையும் திருடியதற்காக, அவருக்கு குடியுரிமை அளிக்கக்கூடாது என 74க்கு 50 என்ற வாக்கு வித்தியாசத்தில் மாகாண நாடாளுமன்றம் முடிவு செய்தது.
திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 122 சுவிஸ் ஃப்ராங்குகள்.
ஆனால், நாடாளுமன்றத்தின் முடிவு தன்னிச்சையானது, முறையற்றது என்று கூறி நாடாளுமன்றத்தின் முடிவை நிராகரித்த நீதிமன்றம், அந்த இளைஞருக்கு சுவிஸ் குடியுரிமை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.