அம்பானி வீட்டுக்கு பக்கத்தில் சொந்த வீடு வாங்கிய தமிழர்! அவர் யார் தெரியுமா?
பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி வீட்டுக்கு பக்கத்தில் சொந்த வீடு வாங்கிய தமிழரை பற்றி பார்க்க போகிறோம்.
யார் அவர்?
தமிழக மாவட்டமான நாமக்கல், மோகனூரில் பிறந்து இன்று டாடா குழும நிறுவனங்களின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் என்.சந்திரசேகரன் (Natarajan Chandrasekaran).
இவர், கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் அப்ளைடு சயின்ஸில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதன்பிறகு, திருச்சியில் உள்ள பிராந்திய பொறியியல் கல்லூரியில் எம்சிஏ படித்தார். இதனையடுத்து 1987 -ம் ஆண்டு Tata Consultancy Services நிறுவனத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்தார்.
பின்னர் அவரது திறமையால் 2007 -ம் ஆண்டு தலைமை இயக்க அதிகாரியாக (COO) நியமிக்கப்பட்டார். இதன் பிறகு 2009 -ம் ஆண்டு டாடா கன்சல்டன்சியின் சிஇஓவாகப் பொறுப்பேற்றார்.
பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை கொடுத்த நிறுவனங்களில் டாடா சன்ஸ் (Tata Sons) நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. அதாவது, இந்திய சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள 27 டாடா குழும பங்குகளின் முதலீட்டாளர்களுக்குச் சுமார் 6 லட்சம் கோடிக்கு லாபம் கிடைத்துள்ளது.
மும்பையில் வீடு
இவரது சம்பளம் 2019 -ம் ஆண்டு ரூ.65 கோடியாக இருந்த நிலையில் 2022 -ம் ஆண்டு ரூ.109 கோடியாக உயர்ந்துள்ளது.
இதனால், 2022 -ம் ஆண்டு மும்பையில் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் வசிக்கும் ஆண்டிலியாவுக்கு அருகில் ரூ.98 கோடி மதிப்புள்ள டூப்ளக்ஸ் பிளாட் (Duplex flat) ஒன்றை வாங்கினார்.
சமீபத்தில், அமெரிக்க முன்னாள் அதிபர் Barack Obama தொகுத்து வழங்கிய Netflix ஆவணப்படமான 'Working: What We Do All Day' திரையிடப்பட்டது. இதில் தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய நுண்ணறிவுகளை Chandrasekaran பகிர்ந்து கொண்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |