கனடாவில் கூரையே இல்லாத காரில் பயணித்த இளம்பெண்... தடுத்து நிறுத்திய பொலிசாருக்கு தெரியவந்த உண்மை
கனடாவில் இளம்பெண் ஒருவர் கூரையே இல்லாத காரை ஓட்டிவந்த நிலையில், அவரை விசாரித்த பொலிசாருக்கு அவர் எக்கச்சக்கமாக மது அருந்தியிருந்தது தெரியவந்தது.
Saskatchewanஇலுள்ள Meadow Lake பகுதியில் தாறுமாறாக கார் ஓட்டிய ஒரு 27 வயது இளம்பெண், திருப்பம் ஒன்றில் ட்ரக் ஒன்றின் மீது மோதியுள்ளார். அவர் மோதிய வேகத்தில் அவரது காரின் மேற்கூரை பறந்துபோய்விட்டிருக்கிறது.
காரின் முன்பக்கக் கண்ணாடி சிதைந்த நிலையிலும், அந்த பெண் காரை நிறுத்தாமல் ஓட்டிக்கொண்டே இருந்திருக்கிறார்.
பிறகு வீடு ஒன்றின் முன் காரை நிறுத்திய அவரை பொலிசார் விசாரிக்கும்போது, அவர் அனுமதிக்கப்பட்ட அளவை விட, நான்கு மடங்கு அதிக மது அருந்தியிருந்தது தெரியவந்தது.
அத்துடன், அவரது காரில் ஆறு மதுபாட்டில்கள் காலியாகவும் ஒரு மதுபாட்டில் பாதி மதுவுடனும் கண்டெடுக்கப்பட்டன.
இந்த காரின் நிலைமையைப் பார்த்தாலே போதும், விசாரிக்காமலே என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடித்துவிடலாம் என்கிறார் பொலிசார் ஒருவர்.
அந்த பெண் மீது, ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டியது, விபத்து ஏற்பட்ட பின்னும் காரை நிறுத்தாதது மற்றும் பொலிசாரிடமிருந்து தப்பியோடியது முதலான பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.