உலகில் எங்கும் இல்லாத வகையில் கருங்கல்லில் செதுக்கிய சிவன் அரண்மனை!
இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகரம் அமைந்துள்ளது.
மட்டக்களப்பு
இப்பிரதேசத்தில் ஏராளமான பௌத்த விகாரைகளைக் காணப்படுவதாக மகா வம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் மட்டக்களப்புப் பிரதேசத்தில் பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதம் என பலரும் வாழ்ந்து வந்துள்ளதாக வரலாறு தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில் அங்கு பல இந்து கோவில்களும் காணப்படுகின்றன. இருப்பினும் இலங்கையில் உள்ள பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் இங்கு தான் அமைந்துள்ளது.
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம்
அந்நியர் ஆட்சியின் போது பல ஆலயங்கள் இருந்த இடமே தெரியாமல் அழியப்பட்டது.
ஆனால் இந்த ஆலயம் அழிவில்லாமல் பல வருடக்காலமாக இருந்து வருகின்றது.
இந்த கோவில் "புல்லுண்ட கல் நந்தி" என்ற பெறுமையை பெற்றுள்ளது.
இந்த ஆலயம் சிவனின் மகிமையை வெளிப்படுத்தும் சிறந்த தளமாகும்.
அதுமட்டுமல்லாமல் 3000 திருமந்திரங்ளை கருங்கல்லில் பதித்து ஒரு மண்டபமும் கட்டப்பட்டுள்ளது.
இதனை காண பலரும் பல இடங்களில் இருந்து வருகை தந்து எம்பெருமானை தரிசித்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக தகவலுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்.