பிரித்தானிய கிராமம் ஒன்றில் பயங்கர தொற்றுநோய்க்கிருமிகள்: கொல்லப்படும் பறவைகள்
பிரித்தானிய கிராமம் ஒன்றில் பயங்கர பறவைக்காய்ச்சல் கிருமிகள் கண்டுபிடிப்பு.
அங்குள்ள பறவைகள் அனைத்தும் கருணைக்கொலை செய்யப்பட உள்ளதாக தகவல்.
இங்கிலாந்திலுள்ள கிராமம் ஒன்றில் பயங்கரமாக தொற்றும் திறன் வாய்ந்த பறவைக்காய்ச்சல் கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Gayton என்னும் கிராமத்தில், வர்த்தக ரீதியில் கோழிகள் விற்கப்படும் இடம் ஒன்றில் H5N1 என்னும் கொடிய பறவைக்காய்ச்சலை உண்டுபண்ணும் வைரஸ் கிருமிகள் இருப்பதை விலங்குகள் மற்றும் பறவைகள் சுகாதார ஏஜன்சியான APHA கண்டுபிடித்துள்ளது.
அதைத் தொடர்ந்து, அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பறவைகளும் கருணைக்கொலை செய்யப்பட உள்ளன.
கடந்த டிசம்பரில் இதே இடத்தில் பறவைக்காய்ச்சல் பரவல் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.