சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோருவோரில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்தான்...
சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோருவோரில் மூன்றில் ஒரு பகுதியினர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள்தான் என சுவிஸ் புலம்பெயர்தலுக்கான மாகாணச் செயலகம் தெரிவித்துள்ளது.
தாலிபான்களின் கடினமான கட்டுப்பாடுகள் காரணமாக ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேற விரும்புகிறார்கள் அந்நாட்டு மக்கள் பலர்.
அதிகரிக்கும் ஆப்கன் புகலிடக்கோரிக்கைகள்
2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சுவிட்சர்லாந்தில் அளிக்கப்பட்ட 3.568 புகலிடக்கோரிக்கைகளில் 1,266 ஆப்கானிஸ்தான் நாட்டவர்களால் அளிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு வருபவர்களில் பெரும்பான்மையோர் இளம் ஆண்கள். ஆண்களைவிட அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பெண்கள் அதிகம் வருவதில்லை. அதற்குக் காரணம், தங்கள் மகள்களைப் பிரிந்தால் அவர்கள் வன்புணரப்படலாம் என பெற்றோர் பயப்படுவதுதான் என்கிறார் ஜெனீவாவில் வாழும் ஆப்கன் நாட்டவரான Maryam Yunus Ebener.
2021ஆம் ஆண்டு, தாலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து, ஆப்கானிஸ்தான் நாட்டவர்களை அந்நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதை சுவிட்சர்லாந்து நிறுத்திவிட்டது. ஆனாலும், சுவிட்சர்லாந்துக்குள் பிற ஐரோப்பிய நாடுகள் வழியாக நுழையும் புகலிடக்கோரிக்கையாளர்கள், அந்த ஐரோப்பிய நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Kabul © Acobhouse | Dreamstime.com